இந்தியாவின் வளம் நிறைந்த கடலோரப் பகுதிகளில் பல்வேறு துறை முகங்கள் உள்ளன. இந்தத் துறைமுகங்களில் தமிழ் நாட்டிற்கு அருகிலுள்ள மாநிலமான கேரளாவின் கொச்சியில் உள்ள துறைமுகம் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இந்த துறைமுகத்தில் ஸ்போர்ட்ஸ் டிரெய்னிங் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: கொச்சி போர்ட் டிரஸ்டின் ஸ்போர்ட்ஸ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2013 அடிப்படையில் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் 2010க்குப் பின்னர் மாநில அல்லது பல்கலைக் கழக அல்லது மாநில பள்ளி அளவில் வாலிபால், ஷட்டில் பேட்மிண்டன், புட் பால் போன்ற ஏதாவது ஒரு விளையாட்டு வீரராக இருந்திருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் யெல்லண்டு பகுதியில் நிலக்கரி சுரங்கத்திற்கான ஆதாரங்கள் இருப்பது 1871லேயே கண்டறியப்பட்டது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் 1956ல் இந்த நிறுவனம் பேக்டரீஸ் ஆக்ட் சட்டத்தின் கீழ் அரசுடைமை நிறுவனமாக மாற்றப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள கனிம சுரங்க நிறுவனங்களில் இந்த நிறுவனம் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் அஸிஸ்டெண்ட் கிரேடு 2 பிரிவிலுள்ள 117 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை சார்ந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் பிரசார் பாரதி என்ற நிகர்நிலை அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அமைப்பு 23.11.1997 அன்று முதல் நடப்பிற்கு வந்தது.
இதற்கு முன்னர் வரை மத்திய அரசின் இன்பர்மேஷன் அண்டு பிராட்கேஸ்டிங் மந்திரி சபையின் முழுக்கட்டுப்பாட்டிலேயே தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ இயங்கி வந்தது. இந்த பிரசார் பாரதி அமைப்பு நிறுவப்பட்ட பின்னர் முழுக்க முழுக்க இவற்றின் அங்கமாக தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ மாறின.
தற்போது பிரசார் பாரதியின் சார்பாக ஆங்கில செய்தி அறிவிப்பாளர், செய்தி அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர், டிரான்ஸ்மிஷன் எக்ஸிக்யூடிவ்/பிராட்கேஸ்ட் எக்ஸிக்யூடிவ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் யுனிவர்சிடி என்ட்ரி ஸ்கீம் என்ற அடிப்படையில் பெர்மனன்ட் கமிஷன் ஆபிசர்ஸ் பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்ஜினியரிங் பிரிவிலான இந்த பதவியில் மொத்தம் 60 காலி இடங்கள் உள்ளன.
தேவைகள்: இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவு பெர்மனன்ட் கமிஷன் ஆபிசர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த 2013-2014ஆம் கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு முந்தைய ஆண்டில் பயில்பவராக இருக்க வேண்டும்.
இவர்கள் திருமணம் ஆகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், புரொடக்சன், ஆட்டோமொபைல், ஏரொனாடிகல், ஏவியானிக்ஸ், ஏரோஸ்பேஸ், மெட்டலர்ஜிகல்,