தாமோதர் வேலி கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு
தாமோதர் பள்ளத்தாக்கில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பேரழிவை தடுக்கும் விதத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் அமைப்பு நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட நாள் முதல் தொடர்ந்து சீரிய முறையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
|
|
இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலுள்ள காலி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தாமோதர் பள்ளத்தாக்கில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பேரழிவை தடுக்கும் விதத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் அமைப்பு நிறுவப்பட்டது.
|
மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி.,தேர்வு அறிவிப்பு
இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
|
|
பிரிவுகளும் காலி இடங்களும்: யு.பி.எஸ்.சி., அமைப்பின் சார்பாக டெபுடி சூபரின்டெண்டன்ட்- ஆர்க்கியாலஜி பிரிவில் 8 இடங்களும், லெக்சரர் பிரிவில் 1ம், சயிண்டிஸ்ட் பி பிரிவில் 21ம், ஆயுர்வேதா பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 5ம், யுனானி பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 3 என்ற அளவில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. |
சிவில் இன்ஜினியரிங்பணி வாய்ப்பு
துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது.
|
|
இந்த நிறுவனம் இயற்கையாகவே மிக முக்கிய துறைமுகமான விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் (டிரெய்னி) பிரிவில் 13 சிவில் இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
|