இந்தியாவின் பொதுத்துறை சார்ந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் பிரசார் பாரதி என்ற நிகர்நிலை அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அமைப்பு 23.11.1997 அன்று முதல் நடப்பிற்கு வந்தது.
இதற்கு முன்னர் வரை மத்திய அரசின் இன்பர்மேஷன் அண்டு பிராட்கேஸ்டிங் மந்திரி சபையின் முழுக்கட்டுப்பாட்டிலேயே தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ இயங்கி வந்தது. இந்த பிரசார் பாரதி அமைப்பு நிறுவப்பட்ட பின்னர் முழுக்க முழுக்க இவற்றின் அங்கமாக தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ மாறின.
தற்போது பிரசார் பாரதியின் சார்பாக ஆங்கில செய்தி அறிவிப்பாளர், செய்தி அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர், டிரான்ஸ்மிஷன் எக்ஸிக்யூடிவ்/பிராட்கேஸ்ட் எக்ஸிக்யூடிவ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆங்கில செய்தி அறிவிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்/செய்தி அறிவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் பட்டதாரியாகவோ அல்லது பட்டதாரியாகவோ இருப்பதுடன் ஆங்கில மொழியறிவு/படிப்பறிவு தேவைப்படும்.
இதர இந்திய மொழிகளில் திறனும் கூடுதலாகத் தேவைப்படும். இத்துடன் ஒளிபரப்புவதற்கேற்ற குரல் வளமும் தேவைப்படும். கம்ப்யூட்டர் அறிவும், இதழியல் தொடர்பான அறிவும் இருந்தால் நல்லது.
டிரான்ஸ்மிஷன் எக்ஸிக்யூடிவ்/பிராட்கேஸ்ட் எக்சிகியூடிவ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப் படிப்பு முடித்திருப்பதுடன், ரேடியோ/டி.வி., புரொடக்சனில் டிப்ளமோ படிப்பு முடித்திருப்பதுடன் நேரடி ஒளிபரப்பிற்கான பேனல் ஆப்பரேஷன் அனுபவமும் தேவை. இவர்களுக்கும் கம்ப்யூட்டர் அறிவும், இதழியல் தொடர்பான அறிவும் இருந்தால் நல்லது. பிற தகவல்கள்: பிரசார் பாரதியின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.300/-ஐ வங்கி டி.டி., வாயிலாக கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படைகளில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிகிறது. முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்களை பின்வரும் முகவரிக்கு 25.08.2013க்குள் கிடைக்குமாறு அனுப்பவும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
முகவரி:
Director of Administration,
News Services Division, All India Radio,
New Broadcasting House,
Parliament Street,
New Delhi -110001
இணையதள முகவரி: http://www.newsonair.com/vacancy/Job1.pdf>
No comments:
Post a Comment