செல்லின் அமைப்பு
* செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.
* வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? முடியாது
* நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
* பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி - நுண்ணோக்கி
* செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
* மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.