Sunday, August 4, 2013

Want To Get Employee in Indian Army - இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேண்டுமா

இந்திய ராணுவத்தில் யுனிவர்சிடி என்ட்ரி ஸ்கீம் என்ற அடிப்படையில் பெர்மனன்ட் கமிஷன் ஆபிசர்ஸ் பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்ஜினியரிங் பிரிவிலான இந்த பதவியில் மொத்தம் 60 காலி இடங்கள் உள்ளன.
தேவைகள்: இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவு பெர்மனன்ட் கமிஷன் ஆபிசர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த 2013-2014ஆம் கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு முந்தைய ஆண்டில் பயில்பவராக இருக்க வேண்டும்.
இவர்கள் திருமணம் ஆகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், புரொடக்சன், ஆட்டோமொபைல், ஏரொனாடிகல், ஏவியானிக்ஸ், ஏரோஸ்பேஸ், மெட்டலர்ஜிகல்,

மெட்டலர்ஜிகல் அண்டு எக்ஸ்ப்ளோசிவ்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், பயோ-டெக், புட் டெக், இன்போ டெக், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பட்டப் படிப்பின் 3வது ஆண்டில் தற்போது படித்து வருபவராக இருக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990க்கு பின்னரும், 01.07.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். இவற்றுடன் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 157.5 செ.மி., உயரமும் இதற்கு நிகரான எடையும் பெற்றவராக இருக்க வேண்டும். 
மற்ற விபரங்கள்: இந்திய ராணுவத்தின் பெர்மனன்ட் கமிஷனுக்கு உட்படும் மேற்கண்ட பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலேயே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எழுத்துத் தேர்வு, எஸ்.எஸ்.பி.,நேர்காணல், மருத்துவ பரிசோதனை போன்ற முறைகளின் மூலமாக இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிகிறது. முழுமையான தகவல்களுக்கு பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.10.2013
முகவரி:
HQ Southern Command (A Branch), 
Pune (Maharashtra) 
Pin - 411001
இணையதள முகவரி : www.indianarmy.nic.in

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in