இந்தியாவின் வளம் நிறைந்த கடலோரப் பகுதிகளில் பல்வேறு துறை முகங்கள் உள்ளன. இந்தத் துறைமுகங்களில் தமிழ் நாட்டிற்கு அருகிலுள்ள மாநிலமான கேரளாவின் கொச்சியில் உள்ள துறைமுகம் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இந்த துறைமுகத்தில் ஸ்போர்ட்ஸ் டிரெய்னிங் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தேவைகள்: கொச்சி போர்ட் டிரஸ்டின் ஸ்போர்ட்ஸ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2013 அடிப்படையில் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் 2010க்குப் பின்னர் மாநில அல்லது பல்கலைக் கழக அல்லது மாநில பள்ளி அளவில் வாலிபால், ஷட்டில் பேட்மிண்டன், புட் பால் போன்ற ஏதாவது ஒரு விளையாட்டு வீரராக இருந்திருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.