Showing posts with label dinamalar velaivaippu news. Show all posts
Showing posts with label dinamalar velaivaippu news. Show all posts

Monday, September 9, 2013

Indian Army nursing recruitment 2013 - நர்சிங் படிப்புடன் பணிவாய்ப்பு


நமது தரைப்படையின் பல பிரிவுகளில் நர்சாகப் பணியாற்றும் வாய்ப்பை தரைப்படை படிப்புடன் கூடியதாக அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கேரளாவில் இதற்கான படிப்பு தரைப்படையால் நடத்தப்படும். பின்பு பணி வாய்ப்பு அளிக்கப்படும்

How to Join Indian Army ?- துணை ராணுவப் பணியில் எப்படி சேரலாம்

 ஒரு நாட்டுக்கும் அந்நாட்டின் மக்களுக்குமான சேவை புரியும் பணியே மிக நல்ல பணி என்று கருதப்படுகிறது. இது மாதிரியான சேவை புரிய நாட்டின் பாதுகாப்புப் படை, காவல் துறை ஆகியவற்றுடன் மத்தியக் காவல் படை அல்லது துணை ராணுவப் படை, இந்திய கரையோரப் படையும் மிக நல்ல பணித் துறைகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பணிகளில் வாழ்க்கையே பணயம் வைக்கும் சவால்களும் உண்டு. நாடு தழுவிய அளவில் இப்பணிகள் இருப்பதால் பல்வேறுபட்ட மனிதர்கள், கலாசார மாண்புகள் போன்றவற்றை அறியும் வாய்ப்புகள் உள்ளன. 
மத்தியக் காவல் படையைப் பொறுத்தவரை மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி. எப்.,), கரையோரக் காவல் படை(பி.எஸ்.எப்.,), மத்திய நிறுவனப் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோ-திபெத்திய எல்லையோரக் காவல் (ஐ.டி.பி.பி.,), தற்போது 'சகஸ்ட்ர சர்விஸ் பீரோ" என்று வழங்கப்படும் ஸ்பெஷல் சர்விஸ் பீரோ ஆகியவை அடங்கும்.
முப்படைகளின் கூட்டாக செயல்படுவதுதான் இந்திய எல்லைக் காவல் படையின் பணியாகும். இது இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கஸ்டம்ஸ் அமைப்புகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுகிறது. கடல், நதித் துவாரங்கள் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள காஷ்மீரின் நதிகள் ஆகிய பகுதிகளை இது தீவீரமாக கண்காணிக்கின்றது.

Wednesday, September 4, 2013

Damodar Valley Corporation Engineering opportunities - Last Date : 18/09/2013

 தாமோதர் வேலி கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு
 தாமோதர் பள்ளத்தாக்கில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பேரழிவை தடுக்கும் விதத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் அமைப்பு நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட நாள் முதல் தொடர்ந்து சீரிய முறையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.


  இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலுள்ள காலி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தாமோதர் பள்ளத்தாக்கில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பேரழிவை தடுக்கும் விதத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் அமைப்பு நிறுவப்பட்டது.

Wednesday, August 14, 2013

IFFCO Recruitment Last Date : 15th August 2013 (இப்கோ நிறுவனத்தில் நிதி நிர்வாக பயிற்சியாளர்கள்)

இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் என்ற இப்கோ நிறுவனம் 1967ல் பல்வேறு யூனிட்டுகளைக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக நிறுவப்பட்டது. உரங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை பல இடங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்வதை முதன்மையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. ஒரு கூட்டுறவு கழகமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் பினான்சியல் மேனேஜ்மெண்ட் டிரெய்னி (எப்.எம்.டி.,) பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: இப்கோ நிறுவனத்தின் நிதி நிர்வாகப் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2013 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சார்டர்டு அக்கவுண்டண்ட் (சி.ஏ.,) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Sunday, August 4, 2013

scclmines recruitment 2013 august updates (சிங்கானேரி நிலக்கரி நிறுவனத்தில் பணியிடங்கள்)

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் யெல்லண்டு பகுதியில் நிலக்கரி சுரங்கத்திற்கான ஆதாரங்கள் இருப்பது 1871லேயே கண்டறியப்பட்டது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் 1956ல் இந்த நிறுவனம் பேக்டரீஸ் ஆக்ட் சட்டத்தின் கீழ் அரசுடைமை நிறுவனமாக மாற்றப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள கனிம சுரங்க நிறுவனங்களில் இந்த நிறுவனம் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் அஸிஸ்டெண்ட் கிரேடு 2 பிரிவிலுள்ள 117 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

Monday, July 22, 2013

IBPS common declaration of written exam 2013 July Updates (ஐ.பி.பி.எஸ்.,சின் பொது எழுத்துத் தேர்வு அறிவிப்பு)

இன்ஸ்டியூட் ஆப் பேங்கிங் பெர்சானல்
செலக்சன் எனப்படும் ஐ.பி.பி.எஸ்., அமைப்புதான் தற்சமயம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளரிக்கல் மற்றும் அதிகாரி பணி இடங்களை பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் மூலமாக செய்து வருகிறது என்பது நாம் அறிந்ததுதான்.
தற்சமயம் இந்தியாவில் உள்ள 21 பொதுத் துறை வங்கிகள் இந்த அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் காலி இடங்களை நிரப்பி வருகின்றன. இந்த அமைப்பின் சார்பாக புரொபேஷனரி அதிகாரிகள் மற்றும் நிர்வாகப் பயிற்சியாளர்கள் பதவிக்கான பொது எழுத்துத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: ஐ.பி.பி.எஸ்.

Manipal School of Banking Recruitment 2013 July Updates( ஐ.ஓ.பி., மணிப்பால் ஸ்கூல் ஆப் பாங்கிங்அறிவித்துள்ள பி.ஓ., பணிவாய்ப்பு)

பொதுத் துறை வங்கிகளில் அனைவராலும் அறியப்படுவதும், ஐ.ஓ.பி., என்று அழைக்கப்படுவதும், தமிழ் நாட்டின் சென்னையை தலைமையகமாகக் கொண்டு லாபகரமாக இயங்கி வருவதுமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள 480 புரோபேஷனரி அதிகாரி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள் : ஐ.ஓ.பி.,யின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.09.2013 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும், இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Border Security Force Constable Recruitment 2013 July Updates (எல்லைப் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் )

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
இடையே 1965ல் போர் மூண்ட போதுதான் இந்தியாவின் எல்லைகளைக் காப்பதற்கு என்ற பிரத்யேகப் படை தேவை என்ற உண்மை உணரப்பட்டது. இதன் விளைவாக 1965ல் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் பி.எஸ்.எப்., படை நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த படை இந்திய தேசத்தின் எல்லைகளைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படையில் விளையாட்டுத் துறை சார்ந்த வீரர்களுக்கான பிரத்யேக பணி நியமனமாக 90 கான்ஸ்டபிள் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகளும் காலி இடங்களும்: பி.எஸ்.எப்.,பில் தனி நபர் திறன் சார்ந்த விளையாட்டுப் பிரிவில் 62 காலி இடங்களும், குழுவாக விளையாடும்

Public sector insurance companies opportunities 2013 July recruitment (பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நேரடி அதிகாரி பணிவாய்ப்பு)

இந்தியாவின் பொதுக் காப்பீடு
தொடர்புடைய மரைன், பர்க்லரி, பயர் உள்ளிட்ட ஆயுள் தவிர்த்த இதர காப்பீடுகளை பல்வேறு நிறுவனங்கள் செய்து வந்தாலும் பொதுத் துறை சார்ந்த நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ், நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களே அனைவராலும் அறியப்படுகின்றன. சமூகம் சார்ந்த சேவைக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனங்கள் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களில் உள்ள நிர்வாக அதிகாரி பிரிவில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான ஜிப்ஸா வெளியிட்டுள்ளது. 
காலியிட விபரங்கள்: இந்த அறிவிப்பின்படி, நேஷனல் இன்ஸ்யூரன்ஸ்

Sunday, July 14, 2013

Agricultural officials in South Indian Bank Recruitment 2013 - சவுத் இந்தியன் வங்கியில் விவசாய அதிகாரிகள்

சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதேசி இயக்கம் நடைபெற்று வந்த போது கேரள மாநிலம் திருச்சூரில் இந்த வங்கி நிறுவப்பட்டது. தற்போது தனியார் துறையைச் சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாக லாபகரமாக இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளதுடன் நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காகவும் இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த 25 விவசாய அதிகாரிகள் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் அக்ரிகல்சுரல் ஆபிசர் பதவிக்கு

Nuclear Power Corporation Recruitment 2013 - நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் குஜராத் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகளும் காலி இடங்களும்: என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஸ்டைபண்டரி காலி இடங்கள் டிப்ளமோ ஹோல்டர், பி.எஸ்.சி., ஹோல்டர், பிளாண்ட் ஆபரேட்டர், பிட்டர் - மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் முதல் பிரிவில் 21 இடங்களும், இரண்டாவது பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

Thursday, June 20, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு

: ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in