ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் யெல்லண்டு பகுதியில் நிலக்கரி சுரங்கத்திற்கான ஆதாரங்கள் இருப்பது 1871லேயே கண்டறியப்பட்டது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் 1956ல் இந்த நிறுவனம் பேக்டரீஸ் ஆக்ட் சட்டத்தின் கீழ் அரசுடைமை நிறுவனமாக மாற்றப்பட்டது.தற்போது இந்தியாவில் உள்ள கனிம சுரங்க நிறுவனங்களில் இந்த நிறுவனம் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் அஸிஸ்டெண்ட் கிரேடு 2 பிரிவிலுள்ள 117 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.