Wednesday, July 17, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள் Part I

செல்லின் அமைப்பு
* செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.
* வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா?  முடியாது
* நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
* பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி - நுண்ணோக்கி
* செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
* மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.

* முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் - கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
* செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்
* அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665  பெயரிட்டார்.
* செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
* செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
* பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான் செல்
* தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
* பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
* செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
* சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள்
அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.
* புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு - பாக்டீரியா
* யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்.
* யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
* விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.
* செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்மா படலம்.
* பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
* புரோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.
* புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.
* புரோட்டோ என்றால் முதன்மை
* பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
* பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
* சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
* செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு(நியூக்ளியஸ்)
* உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
* உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in