சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதேசி இயக்கம் நடைபெற்று வந்த போது கேரள மாநிலம் திருச்சூரில் இந்த வங்கி நிறுவப்பட்டது. தற்போது தனியார் துறையைச் சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாக லாபகரமாக இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளதுடன் நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காகவும் இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த 25 விவசாய அதிகாரிகள் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் அக்ரிகல்சுரல் ஆபிசர் பதவிக்கு
விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பி.எஸ்.சி., பி.டெக்., அல்லது பி.இ., பட்டப் படிப்பை அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி, ஹார்டிகல்சர் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு அக்ரிகல்சர் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் முது நிலை படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
மற்றவை: சவுத் இந்தியன் வங்கியின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வு, நேர்காணல், குழு விவாதம் போன்ற தேர்ச்சி முறைகள் இருக்கும் என்று தெரிகிறது. முழுமையான தகவல்களைப் பெற பின்வரும் இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் கட்டணம் உள்ளிட்ட இதர இணைப்புகளுடன் உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்-லைன் பதிவு செய்ய இறுதி நாள்: 20.07.2013
விண்ணப்பங்கள் சென்றடைய நாள்: 25.07.2013
இணையதள முகவரி: http://www.southindianbank.com/UserFiles/Agri.Officers_Notification_2013.pdf

No comments:
Post a Comment