பொதுத் துறை வங்கிகளில் அனைவராலும் அறியப்படுவதும், ஐ.ஓ.பி., என்று அழைக்கப்படுவதும், தமிழ் நாட்டின் சென்னையை தலைமையகமாகக் கொண்டு லாபகரமாக இயங்கி வருவதுமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள 480 புரோபேஷனரி அதிகாரி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள் : ஐ.ஓ.பி.,யின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.09.2013 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும், இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் 2 ஆண்டு காலத்திற்கு புரொபேஷன் அடிப்படையில் பணி புரிய வேண்டியிருக்கும்.
ஏனைய விபரங்கள் : எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற நிலைகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவி நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ
கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் :29.07.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 01.09.2013
இணையதள முகவரி:
முக்கியக் குறிப்பு: இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஐ.ஓ.பி., புதிய நடைமுறையை கடைப்பிடிக்க உள்ளது. மணிப்பால் ஸ்கூல் ஆப் பாங்கிங் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ஐ.ஓ.பி., ஓராண்டு பாங்கிங் அண்ட் பைனான்ஸ் படிப்பை நடத்தவுள்ளது. இந்த படிப்பில் சேர்ந்து ஓராண்டில் அதை வெற்றிகரமாக முடிப்பவருக்கு ஐ.ஓ.பி., நேரடியாக பி.ஓ., பணி வாய்ப்பை வழங்க உள்ளது. இந்தப் படிப்புக்கான கட்டணம் ரூ.3.3லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கும் ஐ.ஓ.பி.,யே கடனையும் தந்து விடுமாம். படிப்பின் போது முதல் 9 மாதங்களுக்கு மாதம் ரூ.2500 உதவித் தொகையாக தரப்படும். கடைசி 3 மாதங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தரப்படுமாம். இதை வெற்றிகரமாக முடித்தால் மட்டும் போதாது. பணிக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஐ.ஓ.பி.,யில் பணிபுரிவதான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும். அப்படி தொடர முடியாத போது ரூ.2 லட்சம் பணமாக செலுத்துவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
Click Here: www.iob.in/ uploads/CEDocuments/Final%20Manipal%20PO%20Web%20Ad%20English.pdf
TAGS: Manipal School of Banking Recruitment 2013 July Updates, dinamalar employment nes, dinamalar kalvi malar news 2014, dinamalar velaivaippu news, dinathanthi news about TNPSC notification 2012, latest dinamalar employment news updates, tnpsc news from dinathanthi,

No comments:
Post a Comment