தமிழ் நாட்டின் அரசுப் பணி இடங்க
ளை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக அரசுக் காலி இடங்களான எக்ஸிக்யூடிவ் ஆபிசர் பிரிவில் கிரேடு 3ல் 58ம் கிரேடு 4ல் 23 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த காலி இடங்களுக்கு அரசின் நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவைகள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட காலி இடங்களில் கிரேடு 3 எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு 25 வயது முதல் 35 வயது உடையவர்களும், கிரேடு 4 பிரிவு எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு
விண்ணப்பிக்க 35 முதல் 40 வயது உடையவர்களும் விண்ணப்பிக்கலாம். கிரேடு 3 பிரிவிலான எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு அறிவியல், கலை மற்றும் காமர்ஸ் புலங்களில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவற்றில் பல்கலைக் கழகத்திற்கு ஏற்றபடி சில நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். கிரேடு 4 பிரிவிலான எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு குறைந்த பட்சம் பத்தாம் வகுப்புக்கு நிகரான கல்வித் தகுதி தேவைப்படும். மேற்கண்ட 2 பதவிகளுக்குமே எழுத்துத் தேர்வு, நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம் என்று தெரிகிறது.
இதர தகவல்கள்: டி.என்.பி.எஸ்.சி.,க்கான கிரேடு 4க்கான எழுத்துத் தேர்வு தமிழகத்தின் முக்கிய 16 மையங்களிலும், கிரேடு 3க்கான எழுத்துத் தேர்வு 32 மையங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உரிய கட்டணத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும். முதலில் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்த பின்னர் அஞ்சல் அலுவலகம் மூலமாகவோ அல்லது வங்கியின் மூலமாகவோ கட்டணத்தை செலுத்த வேண்டும். பிரிவு வாரியான தேவைகளையும், முழுமையான விபரங்களையும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 16.08.2013
கட்டணம் செலுத்த இறுதி நாள் : 20.08.2013
இணையதள முகவரிகள் : www.tnpsc.gov.in/notifications/12_2013_not_eng_eo_III_grp_VII_B.pdf மற்றும்
www.tnpsc.gov.in/notifications/13_2013_not_eng_eo_III_grp_VIII.pdf
TAGS: tnpsc executive officer jobs 2013, tnpsc executive officer vacancy 2014, tnpsc executive officer result2013, tnpsc executive officer grade-i, tnpsc group 8 qualification, tnpsc group 8 exam qualification, tnpsc group 8 notification 2014, tnpsc group 8 2014,
tnpsc executive officer recruitment 2014 |

Thanks for the great info, Really helpfull central govt jobs in tamilnadu
ReplyDelete