Monday, July 1, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள் -I, II க்கான வரலாறு வினா - விடைகள்

TET ONLINE DISCUSSION IN TAMIL
*  ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு - 1870
*  சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் - மஞ்சு ஆட்சிக்காலம்
*  ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600
*  பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் - கால்பர்ட்
*  சீனக் குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்
*  உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் - கெய்சர் இரண்டாம் வில்லியம்
*  ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிட்டானியா
*  பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா
*  பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி
*  ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்

*  இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை - வெர்சேல்ஸ் உடன்படிக்கை
*  முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்
*  இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் - சர். வின்ஸ்டன் சர்ச்சில்
*  பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்
*  ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945
*  பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - திஹேக்.
*  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ
*  1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர் கலகம்
*  குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி - நிலவரி
*  பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு - 1856
*  முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்
*  சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - ராஜராம் மோகன்ராய்
*  சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்
*  இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - பேலூர்
*  சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்
*  தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி - ஈ.வெ. ராமசாமி
*  இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
*  சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது - தேசியம்
*  முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் - மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
*  பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - திலகர்
*  சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை - சத்தியாகிரகம்
*  சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி - சுயராஜ்ஜியம்
*  இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் - லின்லித்கோ
*  நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது - ஜின்னா
*  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - ஜனவரி 26. 1950
*  இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் - டாக்டர் இராஜேந்திரபிரசாத்
*  வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் - திப்புசுல்தான் மகன்கள்
*  வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் - இராஜ கோபாலச்சாரியார்
*  வைக்கம் அமைந்துள்ள இடம் - கேரளா

பொருத்துக
*  கிளமண்சு - பிரான்சு
*  ஜெர்மன் உடன்படிக்கை - ஆஸ்திரியா
*  ஒவரா - இரகசிய காவல்படை
*  ஸ்வதிகா - நாசி சின்னம்
*  அணு சோதனை தடைச்சட்டம் - 1963.

*  ஆர்லாண்டோ - இத்தாலி
*  வெர்செயில்ஸ் உடன்படிக்கை - ஜெர்மனி
*  டியூஸ் - முசோலினி
*  லூஃப்ட்வோஃப் - ஜெர்மனி
*  பேகம் ஹஸ்ரத் மஹால் - லக்னோ

*  லாயிட்ஸ் ஜார்ஜ் - பிரிட்டன்
*  நியூலி உடன்படிக்கை - பல்கேரியா
*  பெரும்புரட்சி - 1857
*  இந்துசமய மார்டின் லூதர்கிங் - சுவாமி தாயானந்த சரஸ்வதி
*  கேசரி - பாலகங்காதர திலகர்

*  உட்ரோவில்சன் - அமெரிக்கா
*  செவ்ரேஸ் உடன்படிக்கை - துருக்கி
*  ஃபரர் - தலைவர்
*  விக்டோரியா பேரறிக்கை - மகாசாசனம்
*  பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

*  பிஆர். அம்பேத்கர் - வரைவுகுழு
*  இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்
*  சாணக்கியர் - இராஜாஜி
*  வைக்கம் வீரர் - ஈ.வெ.ரா
*  எல்லை காந்தி - கான் அப்துல் காபர்கான்

*  சௌரி சௌரா - உத்திரபிரதேசம்
*  நீதிக்கட்சி - டி.எம்.நாயர்
*  வள்ளலார் - இராமலிங்க அடிகள்
*  கெய்சர் இரண்டாம் வில்லியம் - ஜெர்மனி
*  கெஸ்டபோ - ஹிட்லரின் இரகசிய காவல்படை

*  டிரையனான் உடன்படிக்கை - ஹங்கேரி
*  கருஞ்சட்டை - முசோலினியின் தொண்டர்கள்
*  ‘U’ வடிவ படகுகள் - ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்
*  மங்கள் பாண்டே - பாரக்பூர்
*  வகுப்பு வாத அறிக்கை - ராம்சே மெக்டொனால்டு

*  நியூ இந்தியா - அன்னிபெசண்ட்
*  மவுண்ட் பேட்டன் பிரபு - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
*  மெயின் காம்ப் - எனது போராட்டம்
*  அரசை உருவாக்குபவர் -- காமராஜர்
*  நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்

*  சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - இராமகிருஷ்ணமடம்
*  சர்தார் வல்லபாய் பட்டேல் - இந்தியாவின் பிஸ்மார்க்
*  ஒன்றிணைப்பு உடன்படிக்கை - 1967
*  அழித்துப் பின்வாங்கும் கொள்கை  - ரஷ்யா
*  ரோம் அணிவகுப்பு - 1922

*  அல்பேனியா - 1939
*  தேவதாசிமுறை - டாக்டர் முத்துலட்சமி ரெட்டி
*  ஈஸ்வர சங்கர வித்யாசாகர் - சமய, சமூக சீர்திருத்தவாதி
*  அட்லாண்டிக் சாசனம் - எப்.டி.ரூஸ்வெல்ட்
*  புனரமைப்பு நிதி நிறுவனம் - கடனுதவிகள்

*  கூட்டாச்சி ரிசர்வ் வங்கி - வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்
*  ஹாங்காங் தீவு - இங்கிலாந்து
*  நானா சாகிப் - கான்பூர்
*  மோதிலால் நேரு - சுயராஜ்ஜியக் கட்சி
*  சுப்பிரமணிய பாரதி - நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்

*  பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் - பங்குச் சந்தை உரிமம்
*  ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு - ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்
*  காக்கிச் சட்டைகள் - ஹிட்லரின் தொண்டர்கள்
*  சுதேசி - ஒருவருடைய சொந்த நாடு
*  பாண்டிச்சேரி - பிரஞ்சுப் பகுதிகள்

*  சத்தியமூர்த்தி - பூண்டி நீர் தேக்கநிலை
*  கோவா - போர்ச்சுக்கீசிய பகுதிகள்
*  இராயல் விமானப்படை - இங்கிலாந்து
*  பன்னாட்டு குடியேற்றம் - சீனா
*  இராணி இலட்சுமிபாய் - ஜான்சி

*  லக்னோ - காலின் கேம்பேல்
*  பதேக்ஹைதர் - வேலூர்கலகம்
*  தொடர் அணு சோதனை - 1996
*  தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் - பான்கீமூன்
*  ஜி.ன்.மோன்ட் - பிரான்சு அரசியல் பிரமுகர்

*  ரத்து செய்யும் உரிமை - எதிர்வாக்கு
*  இனவெறிக் கொள்கை - ஆப்பிரிக்கா
*  இரண்டாம் பகதூர்ஷா - டெல்லி
*  வீரத்தமிழன்னை - டாக்டர்.எஸ்.தருமாம்பாள்
*  கர்நாடகப் போர்கள் - இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்க முடிவு

*  ஏகாதிபத்தியம்
ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு பிற நாடுகளின் பகுதிகளை வென்று அவற்றை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருதல் ஏகாதிபத்தியம் எனப்படும்.

*  காலணி ஆதிக்கம்
அந்நிய நாட்டில் குடியேற்றங்களை ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களை சுரண்டுதல் காலணி ஆதிக்கம் எனப்படும்.
தைபிங் கலகம்
*  நான்சிங் உடன்படிக்கையைப் பின்பற்றி அந்நிய நாட்டவர்கள் சீனாவுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர்
*  எனவே 1854 ல் மஞ்சு அரசுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் எதிராக சீனர்கள் கலகத்தில் ஈடுபட்டனர் இதுவே தைப்பிங் கலகம் என்று அழைக்கப்பட்டது.

*  முதல் உலகப் போருக்கான உடனடி காரணம்
*  1914 ஜீன் 28ம் நாள் பாஸ்னிய தலைநகர் செராஜிவோ நகரில் செர்விய தீவிரவாத இளைஞன் ஒருவனால் ஆஸ்திரிய நாட்டு பட்டத்து இளவரசர் பிரான்சிஸ்
பெர்டினாண்டும் அவரது மனைவி இசபெல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆஸ்திரியா செர்பியாவைக் கோரியது
*  ஆனால் செர்பியாவின் பதில் ஆஸ்திரியாவிற்கு திருப்தி அளிக்கததால் அஸ்திரிய 1914-ம் ஆண்டு ஜீலை 28ம் தேதி செர்பியா மீது போரை அறிவித்தது.

*  செர்செயில்ஸ் உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்
*  ஆஸ்திரிய மற்றும் ஹங்கேரி குடியரசுகள் அங்கீகரிக்கப்பட்டன.
*  டான்சிக நகருக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

*  சர்வதேச சங்கத்தின் அங்கங்கள்
*  பொதுச்சபை
*  மன்றம்
*  செயலகம்
*  சர்வதேச நீதிமன்றம்
*  சர்வதேச தொழிலாளர் அமைப்பு

*  பொருளாதார பெருமந்தம் தோன்றக் காரணங்கள்
*  அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு
*  பங்குகளின் விலை உயரும் என்ற அனுமானத்தில் மக்கள் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்தனர்

*  பாசிசம் பொருள்
*  பாசிசம் பாசிஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து வந்தது
*  இதற்கு கூட்டு அல்லது குழு என்று பொருள்.

*  மியூனிச் உடன்படிக்கை
*  ஹிட்லர் மியூனிச் என்னும் இடத்தில் இங்கிலாந்து பிரதமர் நிவில் சேம்பர்லைன் என்பவருடன்
ஒர் உடன்படிக்கை செய்து கொண்டார்.
*  இதன்படி ஹிட்லர் சூடட்டன்லாந்தை தவிர பிற இடங்களை கைப்பற்றக் கூடாது என்று உறுதி மொழியைப் பெற்றுக் கொண்டார்
*  ஆனால் 1939-ல் மியூனிச் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் செக்கோஸ்லோவாகியா முழுவதையும் ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார்.

*  அழித்துப் பின்வாங்கும் கொள்கை
இராஷ்யர்கள் இரண்டாம் உலகப்போரில் இக்கொள்கையைப் பின்பற்றினர் இதன்படி பயிர்கள், பாலங்கள், இருப்புப் பாதைகள் போன்றவற்றை எதிரிகள் கைப்பற்றாமல் இருக்க
அவற்றை தாங்களே தீயிட்டு அழித்துக்
கொண்டு முன்னேறினர்

*  ஐ.நாவின் சிறப்பு நிறுவனங்கள் சில
*  உலக சுகாதார நிறுவனம்
*  பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்
*  உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்
*  உலக வங்கி

*  ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கங்கள்
*  ஐரோப்பிய குடியுரிமை ஏற்படுத்துதல்
*  சமுதாய முன்னேற்றத்தை உயர்த்துதல்
*  ஐரோப்பிய பாதுகாப்பை பலப்படுத்துதல்
*  சமநீதியை உறுதி செய்தல்

*  விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் முக்கியத்துவம்
*  இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இங்கிலாந்து அரசி நேரடியாக மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
*  இந்தியாவின் பழமையான பண்பாடும் பழக்க வழக்கங்களும் மதிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
*  புரட்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

*  1857ம் ஆண்டு நடந்த புரட்சியின் உடனடிக் காரணம்
*  என்ஃபில்டு ரக துப்பாக்கியும்ää கொழுப்பு தடவிய தோட்டக்களும் புரட்சியின் உடனடி காரணம் ஆகும்.
*  இதன் மேலுறையில் பசு, மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டுள்ளது என்ற வதந்தியினால் இதை வீரர்கள் உபயோகிக்க மறுத்தனர்.
*  மங்கள் பாண்டே கொழுப்புத் தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தனது மேலதிகாரியை சுட்டுக் கொன்றார்.
*  இதனால் அவர் தூக்கிலடப்பட்டார். இந்நிகழச்சியே புரட்சிக்கு உடனடிக் காரணமாயிற்று.

*  பெரும் புரட்சியின் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்கள்
*  இரண்டாம் பகதூர்ஷா - டெல்லி
*  ஜான்சிராணி - மத்தியடெல்லி
*  பேகம் ஹஸ்ரத் மஹால் - லக்னோ
*  நான சாகிப், தாந்தியதோப் - கான்பூர்

*  ஆரிய சமாஜத்தின் பணிகள்
*  மக்களிடையே சுயமரியாதையும், தன்னம்பிக்கையையும் வளர்ந்தது
*  மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்த்தது.

பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்
*  மக்களிடையே சகோதரத்துவ உணர்வை வளர்ப்பது
*  மக்களிடையே தெய்வீக சக்திகளை வளர்ப்பது

*  19-ம் நூற்றாண்டின் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களின் விளைவுகள்
*  இவ்வியக்கங்கள் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், தீண்டாமை ஆகியவற்றை ஒழித்தது.
*  பெண்கல்வி, கலப்பு திருமணம், விதவைகள் மறுமணம், ஆகியவற்றை ஏற்றுக்கொண்டது
*  சமுதாய எழுச்சி, தேசிய உணர்வு பெருகிட வழி வகுத்தது.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in