இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளாக 3 ராணுவ படைகள் மட்டுமே பெரும்பான்மையான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தன. ஆனால் 1977ல் இந்தியாவின் கடலோர எல்லைகளையும் பாதுகாப்பதன் அவசியம் உணரப்பட்டதன் விளைவாக இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் கோஸ்ட் கார்டு படை நிறுவப்பட்டது. இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது, நீர் தொடர்பான நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற முக்கிய பணிகளில் இந்தப் படை ஈடுபடுகிறது. இந்தப் படையில் டெக்னிகல் பிரிவிலான யந்திரிக் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேவைகள்: யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது
நிரம்பியவராகவும் 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 01.02.1992க்கு பின்னரும் 31.01.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் 3 வருட சலுகை எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு மூன்று வருட காலம் படிக்கக் கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோவை மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீ.,யும், இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். நல்ல கண் பார்வை, கேட்கும் திறன், உடல் நிலை போன்ற அம்சங்களும் கட்டாயம் தேவைப்படும்.
ஏனைய தகவல்கள்: கடலோரக் காவல் படையின் மேற்கண்ட காலி இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட இதர தேர்ச்சி முறைகளின் வாயிலாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை தமிழத்தின் சென்னை உள்ளிட்ட நாட்டின் 8 மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம். இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 22.07.2013
இணையதள முகவரி: www.joinindiancoastguard.gov.in/pdf/Full%20page%20yantrik%2001%202012.pdf

No comments:
Post a Comment