இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் மிக முக்கிய ஒன்றான இந்திய விமானப் படை 1932ல் நிறுவப்பட்டு முதல் விமானம் 1933ல் பறக்கத் துவங்கியது. தற்சமயம் சர்வதேச அளவில் நவீன வசதிகள், சிறந்த படை வீரர்கள் போன்றவற்றிற்காக இந்திய விமானப் படை அறியப்படுகிறது. இந்த படையில் மெட்டீயோராலாஜிக்கல் பிரிவிவ்ல் கமிஷன் அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை விமானப் படை தற்போது கோரியுள்ளது.
தேவைகள்: ஐ.ஏ.எப்., எனப்படும் இந்தியன் ஏர் போர்ஸ் படையின் மெட்டீயோராலஜிக்கல் பிரிவிற்கு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் இயற்பியல் மற்றும்
கணிதப் பாடங்களைப் படித்திருப்பதோடு குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் பின்னர் அறிவியல், கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், அப்ளைடு பிஸிக்ஸ், ஓஷனோகிராபி, என்விரான்மெண்டல் பயாலஜி போன்ற ஏதாவது ஒரு
பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முது நிலைப்பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தற்போது இறுதித் தேர்வை எழுது முடித்து முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த கல்வித்தகுதியுடன் சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் கட்டாயம் தேவைப்படும். பெண்கள் குறைந்த பட்சம் 152 செ.மி., உயரமும் இதற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால்
உயரம் குறைந்த பட்சம் 157.5 செ.மி., இருப்பதோடு இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: இந்திய விமானப் படையின் மேற்கண்ட பதவி இன்டலிஜென்ஸ் டெஸ்ட், நேர்காணல், மருத்துவப் பரிசோதனை போன்ற நிலைகளில் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, பின்வரும் முகவரிக்கு 31.08.2013க்குள் கிடைக்குமாறு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவருடன் சுய விலாசமிட்ட மற்றும் ரூ.27/-க்கு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
Post Bag No. 001,
Nirman Bhawan
Post Office,
New Delhi - 110106
இணையதள முகவரி: http://indianairforce.nic.in/

No comments:
Post a Comment