TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION |
* இன்று மனவெழுச்சியில் 4 பரிமாணங்கள்:
1. மகிழ்ச்சி - மகிழ்ச்சியின்மை
2. கவனித்தல் - புறக்கணித்தல்
3. செயலூறு நிலை - செயலற்ற நிலை
4. எளிமை - சிக்கல்
* மனவெழுச்சி - இருமுனைகள் (Bipolar) கொண்டது.
* புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மனவெழுச்சிகள் - வலி, அருவருப்பு, உற்சாகம்
* தற்கருத்து, அவாநிலையுடன் இணைந்த மனவெழுச்சிகள் - பெருமிதம், அவமானம், குற்ற உணர்வு.
* அன்பு, பொறாமை, பரிதாபம் - பிறரைச் சார்ந்து எழும் மனவெழுச்சிகள்.
* பாராட்டுத் தொடர்பான மனவெழுச்சிகள் - ஆச்சரியம், மரியாதை
* சினம், அச்சம், அன்பு என்னும் மூன்றே அடிப்படை மனவெழுச்சிகள் என்றவர் - வாட்சன்
* பிறந்த குழந்தையிடம் காணப்படுவது - பொதுப்படையான உள்ளக்கிளர்ச்சி என்றவர் - பிரஜட்ஸ்
* மகிழ்ச்சி தரக்கூடிய மனவெழுச்சிகள் மனநலம் மேம்படும் உடன்பாடு மனவெழுச்சிகள்
* மகிழ்ச்சியற்ற நிலையை உண்டாக்கும் மனவெழுச்சிகள் - எதிர்ப்பு மனவெழுச்சி
* மனவெழுச்சிகளைப் பயன்படுத்துதல் யாருடைய கடமை - பெற்றோர் மற்றும் ஆசிரியர்.
* எதிர்ப்பு மனவெழுச்சி எல்லோரிடமும் இருக்கிறது. இவையின்றி வாழ்க்கை சுவையாக இருக்காது.
* மாணாக்கரது மனவெழுச்சி வளர்ச்சியால் பெரும் பங்கு வகுக்கும் காரணிகள்:
* தனிநபர் காரணிகள் - 1. உடல் வளர்ச்சி 2. உடல் நலம் 3. நுண்ணறிவு
* சமூகக் கராணிகள் - 1. குடும்பம் 2. பள்ளி
* மனித செயல்களை ஊக்குவிக்கும் காரணி - மனவெழுச்சி
* இலக்கியத்திறன், நுண்கலைத்திறன் எவற்றால் நிகழும் - மனவெழுச்சி
* ஒருவன் ஒரு செயலை செய்து முடிக்கத் தேவைப்படும் துணிவு, சக்தியை தருபவை - மனவெழுச்சிகள்
* சமூக நல்வாழ்விற்கு அடிப்படை - மனவெழுச்சிகள்
* உடன்பாட்டு மனவெழுச்சிகள் - மகிழ்ச்சி, உற்சாகம், பரிவு, களிப்பு
* எதிர்ப்பு மனவெழுச்சிகள் - சினம், அருவருப்பு, அச்சம், துயரம், பொறாமை
* மனவெழுச்சி வெளிப்படும் முறையில் முக்கிய பங்கு வகிப்பவை - பின்பற்றல் (imitation)
* மனவெழுச்சி வெளிப்பாடு சமுதாயத்திற்கு சமுதாயம் வேறுபடும் என்றவர் - மார்க்ரெட் மீட்
* குழவிப்பருவம், முன்பிள்ளைப்பருவம், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குநிலை தோன்றுகிறது என்றவர் - ஃப்ராய்டு
* மனவெழுச்சி நுண்ணறிவு என்ற கருத்தை பிரபலப்படுத்தியவர்கள் - ஜாக்மேயர், பீட்டர் ஸலோவே.
* மனவெழுச்சி நுண்ணறிவு - சமூக நுண்ணறிவின் உள் அங்கம்
* மனவெழுச்சி நுண்ணறிவின் உட்கூறுகள் - 4
1. மனவெழுச்சியினை உணர்தல் மற்றும் வெளிப்படுத்துதல்
2. மனவெழுச்சியினை சிந்தனையில் பயன்படுத்துதல்
3. மனவெழுச்சிகளைப் புரிந்து கொண்டு பகுத்தாய்தல்
4. மனவெழுச்சிகளை நெறிப்படுத்தி சுய முன்னேற்றத்துக்கு வழி வகுத்தல்.
ஒழுக்க வளர்ச்சி - Moral Development
* சமூக அறவெறிகளை அறிந்து அதன்படி ஒட்ட ஒழுகல் ஒழுக்க வளர்ச்சி எனப்படும்.
* நன்னெறிச் சிந்தனை (Moral) - மோர்ஸ் என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
* நீதி சார்ந்த வளர்ச்சி (அ) ஒழுக்க வளர்ச்சி
* கோல்பர்க் படிநிலைகள் - Kohlberg's Stages of Moral Development
* சுமார் 11-12 வயதில் ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கத்தை (நடத்தையை அதன்பின் அமைந்திருக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு மதிப்பிடுதல்) இவர்கள் அடைகிறார்கள்
* 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், தங்களது உணர்ச்சிகள், தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் பிறரது நடத்தைகளை மதிப்பிடுவர்.
தம்மை பிறர் நிலையில் வைத்துப் பார்க்கும் திறனின்று செயல்படுவர்.
* 12 வயதிற்கு மேற்பட்ட நிலையில் சமரசப் போக்கு, மன்னிக்கும் பண்பு போன்றவை அதிகயளவில் காணப்படும்.
கோல்பர்க் என்பவரது விளக்கம் பியாஜேவின் கருத்துக்களுடன் தொடர்பு கொண்டதாகும்.
* குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் மூன்று நிலைகளை கூறியவர் - கோல்பர்க்
1. மரபுக்கு முற்பட்ட நிலை - மகிழ்ச்சி பெறுதல், தண்டணையை தவிர்த்தல்
2. மரபு நிலை - மனித பாராட்டு பெற
3. மரபுக்கு பிந்திய நிலை
* ஒவ்வொன்றிலும் இரண்டு நிலைப்பகுதிகள். மொத்தம் 6 நிலைப்பகுதிகள்.
* அறிவு வளர்ச்சியில் பியாஜே குறிப்பிடும் செயல்களான தன்வயப்படுதல், பொருந்திப்போதல் ஆகிய இரண்டும் ஒழுக்க வளர்ச்சியுலம் காணப்பபடுவதாக கூறியவர் - கோல்பர்க்.
* ஒழுக்கம் பற்றிய இயல்பான நோக்கம், சார்பு நோக்கம் பற்றி கூறியவர் - பியாஜே
* ஒழுக்கம் வளர்ச்சியில் நான்கு நிலைகள் - 1. பட்டறி நிலை 2. ஆதிக்க நிலை (அ) ஆளப்படு நிலை 3. சமூக நிலை 4. தனித்த நிலை
* ஒழுக்க வளர்ச்சிக்கும், முதிர்ச்சி பெறுதலுக்கும் தொடர்பு உண்டு என்றவர் - கோல்பர்க், பியாஜே
* மாணாக்கரிடம் நல்லொழுக்கம் வளர்ச்சியுற - அறநெறிப்போதனை
* ஒழுக்கத்தின் அடிப்படை - தற்கருத்து
* தற்கருத்து என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - லெக்கி
* தன்னைப் பற்றி ஒருவன் கொண்டுள்ள மனப்பான்மைகள், உணர்ச்சிகள் போன்றவற்றின் தொகுப்பே - தற்கருத்து
* பாராட்டு, கண்டிபதன் மூலம் மறைமுகமாக ஒழுக்க பயிற்சிகளை பள்ளிகள் அளிக்கின்றன.
* வாழ்க்கை தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தலில் தற்கருத்து முக்கிய செல்வாக்குப் பெற்று உள்ளது என்றவர் - டொனால்டு சூப்பர்
* நன்னெறிச் சிந்தனை வளர்ச்சியில் 4 நிலைகள் உள்ளன என்றவர் - பியாஜே
* தன்னிச்சை நிலை (0-5)
* வேறுபட்ட நிலை - ஆதிக்க நிலை (5-8)
* வேறுபட்ட நிலை - மாற்றிக் கொள்ளும் நிலை (8-13)
* தன்னாட்சி நிலை (அ) சமன்நிலை - குமரப்பருவம் (13-18 ஆண்டு)
* குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை அதன் மனவெழுச்சி உடல் தேவையை பொறுத்தே அமையும்.
* மனவெழுச்சி முதிர்ச்சி - தனக்கும், பிறருக்கும் மனநிறைவை ஏற்படுத்துவது.
* மனவெழுச்சி நுண்ணறிவு - தன் மற்றும் பிறர் உணர்வுகள், மனவெழுச்சிகளை கண்டறிந்து முறைப்படுத்தும் அறிவு, தற்செயல்களை நெறிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல்.
* ஒழுக்கம் பற்றி முழுமையாக அறிய முயற்சிக்கும் வயது 11 - 12 வயது.
* 1. அறிவு வளர்ச்சி - பியாஜே. 2 உடல் வளர்ச்சி - ஹர்லாக 3. சமூக வளர்ச்சி - எரிக்சன் 4. ஒழுக்க ஒழுக்க வளர்ச்சி - கோல்பர்க்
* ஆளுமை (Personality) என்ற சொல் பெர்சோனா(Persona) என்னும் இலத்தீன் மொழிச்சொல்லிருந்து பிறந்ததாகும்.
* பெர்சோனா என்பது முகமூடி(Mask). கிரேக்க நாடக மேடையில் கதை மாந்தர்கள் முகமூடி அணிந்து நடிப்பர்.
* ஆளுமை என்பது ஒருவர் பெற்றுள்ள உடற்பண்புகள், மனப்பண்புகள், சமூக அறநெறிப்பண்புகள், மனப்பான்மைகள் போன்ற எல்லா பண்புகளும் இணைந்த முழுமையான கலவை.
ஆளுமை வரையறைகள் - Definitions
* ஆல்போர்ட் - ஒருவரிடம் அவருக்கே உரிய சூழ்நிலைக்கேற்ற பொருத்தப்பாட்டினைத் தீர்மானிக்கின்ற அவருடைய உடல், உள்ளம் சார்ந்த அமைப்புகளின் செயல்படும்
ஒருங்கினைப்பு அவரது ஆளுமை.
* கில்போர்டு - ஒருவரது பண்புகளின் தனி்த்தன்மை வாய்ந்த அமைப்பு ஆளுமை எனப்படும்.
* கேட்டல் - மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது ஆளுமை என்ப்படும்.
* கெம்ப் - மனிதர்கள் தம் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தபாடு.
* வாட்சன் - ஆளுமை என்பது நம்பத்தகுந்த செய்திகளை நீண்டதொரு காலத்திற்கு உற்று நோக்கல் வழியே காணக்கூடிய செயல்களின் கூட்டுத்தொகுப்பே என்று கூறுகிறார்.
* ஆளுமையைத் தீர்மானிக்கும் காரணிகள் - Major Determinats of Personality
* உயிரியல் காரணிகள்: 1. உடல் சார்ந்த பண்புகள் 2. நாளமில்லா சுரப்பிகள் 3.நரம்பு மண்டலம்
* சமூகவியல் காரணிகள்: 1. வீடு 2. பள்ளி 3. பண்பாடு 4. மொழி
* உளவியல் காரணிகள்: 1. நுண்ணறிவு 2. ஊக்கம் 3. மனவெழுச்சி 4. மனப்பான்மை 5.அக்கறை 6.பற்று
பிட்யூட்டரி சரபி
* மூளையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.
* பிட்யூட்டரியின் ஹார்மோன்கள் மற்ற சுரப்பிகளின் வளர்ச்சியை தூண்டக்கூடியது. வேதி தன்மையை நிலைப்படுத்தக்கூடியது.
* முதன்மை சுர்ப்பி - சுர்ப்பிகளின் தலைவன்
* குறைவாக சுரப்பதால் - குள்ளத்தன்மை
* அதிகமாக சுரப்பதால் - அசாதாரண வளர்ச்சி
தைராய்டு சுரப்பி
* குரல்வளைக்கு அருகில் உள்ளது.
* தைராக்சின் குறைவால் - குழந்தைகளுக்கு மீக்டோடீமா - கிரெட்டினிசம்
* தைராக்சின் பற்றாக்குறைவால் - முகம் வீங்கியும், பெரிய உதடும், அடிவயிறு பருத்தும், நாக்கு தடித்தும் காணப்படும்.
* தைராக்சின் அதிகமாக சுரப்பதால் - காய்டர்(முன் கழுத்து கழலை) வளர்ச்சி பிறழ்வடைந்த நிலை - கிரேவ் வியாதி, அமைதியிழந்த நிலை, உறக்கமின்மை, எரிச்சல் தோன்றும்.
* பாரா தைராய்டு சுரப்பி - சுண்ணாம்புச்சத்தை உருவாக்கும்.
* பாரா தைராய்டு சுரப்பி குறைவால் - எலும்புகளில் கடினத்தன்மையும், தசைகளில் வலிப்பு தன்மை (டெடானி நிலை) ஏற்படும்.
அட்ரினல் சுரப்பி
* இரு சீறுநீரகங்களின் மேல்புறமாக அமைந்துள்ளது.
* அட்ரினலின் - சண்டை ஹார்மோன், அவசரகால ஹார்மோன்
* கல்லீரல், இரத்தத்தில் சர்க்கரை அளவை சுத்திகரிக்க தூண்டி அதிக உடல் சக்தியை வழங்குகிறது.
* ஆளுமைக் கோட்பாடுகள், கொள்கைகள் - 4
1. வகைப்பாட்டுக் கொள்கைகள்
மனிதன் உடல் அமைப்பைக் கொண்டு ஆளுமையை வேறுபடுத்துகிறது.
* ஹிப்போக்ரெட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்
2. அடிப்படைப் பண்பு கூறு கொள்கைகள்
ஆல்போர்ட், கேட்டல்
3. வகைப்பாடு - அடிப்படை பண்பு கூறு கொள்கை - ஜன்சங்க்
4. வளர்ச்சிக் கொள்கைகள் - உளப்பகுப்புக் கொள்கை - பிராய்டு
* தனிநபர் உளவியல் கொள்கை - ஆட்லர்
* பழி வாங்குதல் படலம் - முதலிடம்
* பகுப்பு உளவியல் கொள்கை - யூங்
* முதலிடம் - பாலூணர்வு
* ஹிபோக்ரெட்ஸ் வகைப்பாடு - இயல்பான உடல்நிலை - ஆளுமையின் இயல்பு
* அரிஸ்டாட்டிலின் மாணவர்
* கிரேக்க அறிவியல் தந்தை
* மனித உடலில் உற்பத்தியாகும் நீர் சுரத்தல் நடத்தை தொடர்பு
* சிரிமூஞ்சி, சிடுமூஞ்சி, அழு முஞ்சி, தூங்கு மூஞ்சி என மனிதர்களை வகைப்படுத்தியவர் - ஹிபோக்ரடீஸ்.
* சிரிமுக மனப்பான்மை - இயங்கும் இரத்தம்
* சிடுமூஞ்சி மனப்பான்மை - கருநிறம் பித்த நீர்
* அழுமூஞ்சி மனப்பான்மை - மஞ்சள் நிறப் பித்தநீர்
* தூங்கு மூஞ்சி மனப்பான்மை - உறங்கும் இரத்தம்
* க்ரெட்ச்மரின் வகைப்பாடு -உடல் கூறுகள்
* ஜெர்மனி உளவியலறிஞர்
* மனிநிலை குன்றியவர்களைச் சோதித்தார்.
* உருண்டையான உடலும் முகமும் உடையோர்
* திரண்ட பருத்த தசைகளும், எலும்புகளும் உடையோர் ஒல்லியாக ஒட்டிய மார்பும், குறுகிய தோள்களும் உடையோர் என உடல் அமைப்பின் அடிப்படையில் மனிதர்களை
3 பிரிவாக வகைப்படுத்தியவர் - க்ரெட்ச்மர்.
ஷெல்டன் வகைப்பாடு - உடல் வகை
* பருமனுடைய ,கட்டுடல், நீருடல்(ஒல்லி) என வகைப்படுத்தியவர் - ஷெல்டன்.
* ஆளுமைப் பண்புகளை 7 புள்ளி அளவுகோலில் குறிப்பிட்டார்.
* ஷெல்டன் கருத்துப்படி ஆப்ரஹாம் லிங்கனின் ஆளுமை 1.1.7
* ஷெல்டன் - 1. பருமன் உடல் 2. நீள் உடல் 3. கட்டுடல்
No comments:
Post a Comment