Friday, July 19, 2013

TET Science Section of the question - answers - டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள் Part II

* உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
* செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா
* மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
* செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell)  -  மைட்டோகாண்ட்ரியா.
* கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படும்.
* உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்.
* உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
* தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
* செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
* ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.

* செல்லின் புரதத்தொழிற்சாலை - ரிபோசோம்கள்
* புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
* லைசோசோம்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
* செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
* செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்.
* செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது - லைசோசோம்கள்.
* விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை - சென்ட்ரோசோம்
* சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
* சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.
* செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.
* செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.
* வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை - நுண் குமிழ்கள்
* செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் - நுண் குமிழ்கள்.
* தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.
* விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
* செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.
* செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
* செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.
* தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
* விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
* தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
* விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
* தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை
* விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.
* தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.
* விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.
* கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.
* கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
* தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
* குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி - குளோரோஃபில் - பச்சை நிற நிறமி.
* குளோரோபிளாஸ்ட் பணி - தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
* குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி.
* குரோமோபிளாஸ்ட் பணி - பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
* லியூக்கோபிளாஸ்ட் பணி - தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
* செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.
* நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
* மிகவும் நீளமான செல் நரம்புசெல்
* நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்
* இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.
* விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.
* விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.
* இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
* எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.
* மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in