இந்தியாவின் பொதுக் காப்பீடு
தொடர்புடைய மரைன், பர்க்லரி, பயர் உள்ளிட்ட ஆயுள் தவிர்த்த இதர காப்பீடுகளை பல்வேறு நிறுவனங்கள் செய்து வந்தாலும் பொதுத் துறை சார்ந்த நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ், நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களே அனைவராலும் அறியப்படுகின்றன. சமூகம் சார்ந்த சேவைக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனங்கள் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களில் உள்ள நிர்வாக அதிகாரி பிரிவில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான ஜிப்ஸா வெளியிட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: இந்த அறிவிப்பின்படி, நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் 165 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகளும், 258 ஜெனரலிஸ்ட் அதிகாரிகளும், நியூ இந்தியா நிறுவனத்தில் 255 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகளும், 239 ஜெனரலிஸ்ட் அதிகாரிகளும், ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் 102 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகளும், 121 ஜெனரலிஸ்ட் அதிகாரிகளும், யுனைடெட் இந்தியா நிறுவனத்தில் 75 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகளும், 219 ஜெனரலிஸ்ட் அதிகாரிகளும் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் பினான்ஸ், இன்ஜினியரிங், மார்கெடிங், லீகல், ஐ.டி., லைப்ரரியன், அக்ரிகல்சர் ஸ்பெஷலிஸ்ட், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் போன்ற உட்பிரிவுகள் உள்ளன. இந்த காலி இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது.
தேவைகள்: இந்த அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.07.2013 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிகளில் ஜெனரலிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பு தேவைப்படும். ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு குறிப்பிட்ட பிரிவில் சிறப்பு கல்வித் தகுதி தேவைப்படும். முழுமையான தேவையை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
மற்ற தகவல்கள்: பொது இன்ஸ்யூரன்ஸ் அறிவித்துள்ள மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.470/- கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.170/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
எழுத்துத் தேர்வு, கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்வு முறை இருக்கும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை மற்றும் கோவை ஆகிய மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணைய தளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 03.08.2013
கட்டணம் செலுத்த இறுதி நாள் : 07.08.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 08.09.2013
இணையதள முகவரி : www.nationalinsuranceindia.com/nicWeb/nic/downloads/R
TAGS:Public sector insurance companies opportunities 2013 July recruitment, dinamalar employment nes, dinamalar kalvi malar news 2014, dinamalar velaivaippu news, latest dinamalar employment news updates, dinamalar velaivaippu news, latest dinamalar employment news updates, tnpsc news from dinathanthi,

No comments:
Post a Comment