Sunday, July 28, 2013

puducherry - Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research Recruitment 2013 (ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கு வேலை)

jipmer recruitment 2014
புதுச்சேரி என்றவுடனே நமது நினைவுக்கு வரும் ஜிப்மர் மருத்துவமனை இந்தியா தவிர்த்து பிற நாடுகளிலும் பெயர் பெற்று விளங்குகிறது. இந்த மருத்துவமனைக்கான அடித்தளம் 1823ஆம் ஆண்டிலேயே பிரஞ்சு அரசால் இடப்பட்டது என்பது நம்மில் பலரும் அறியாத தகவலாகும். 1956லேயே அரசின் வசம் இந்த மருத்துவமனை வந்த போதும் 1964ல் ரீஜனல் சென்டர் என்ற அந்தஸ்துடன் ஜவஹர்லால்நேரு இன்ஸ்டியூட் ஆப் போஸ்ட் கிராஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அண்டு ரிசர்ச் (ஜே.ஐ.பி.எம். இ.ஆர்.,) என்ற பெயர் மாற்றம் பெற்றது. மருத்துவ சேவைகளுக்காக பலராலும் அறியப்படும் ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் ( ஸ்டாப் நர்ஸ்) மொத்தம் 465 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையின் ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 16.08.2013 அடிப்படையில் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதிக பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி.,

பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை உள்ளது.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜெனரல் நர்ஸிங் மற்றும் மிட்-வைபரி அல்லது இதற்கு இணையான பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்திய நர்ஸிங் கவுன்சில் சட்டம் 1947ன் கீழ் நர்ஸ் அண்டு மிட்-வைபரியாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 
பிற தகவல்கள் : ஜிப்மர் மருத்துவமனையின் ஸ்டாப் நர்ஸ் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. எழுத்துத் தேர்வில் மல்டிபிள் சாய்ஸ் வகையிலான 100 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ Accounts Officer, JIPMER என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை, புதுச்சேரியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ரூ.250/- மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது. மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முன்பாக டி.டி., பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உங்கள் கையெழுத்து ஆகியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட சாப்ட் பைல் இருப்பதை உறுதி செய்யவும். ஏனென்றால் இந்த மூன்றையும் அட்டாச் செய்தால் மட்டுமே உங்கள் விண்ணப்பம் ஆன்-லைனில் ஏற்கப்படும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தில் இருந்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.
ஆன்-லைன் பதிவு செய்ய இறுதி நாள் : 16.08.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 08.09.2013
இணையதள முகவரி: http://jobs.freshersworld.com/jobs/JIPMER/Staff&Nurse&68631


TAGS: jipmer result 2013, jipmer 2013 results, jipmer results 2014, jipmer job results 2014, jipmer mbbs 2014, jipmer career plus, jipmer syllabus 2014, jipmer examination, jipmer recruitment staff nurse 2013 jipmer application form 2014, jipmer entrance exam 2014, jipmer hospital recruitment 2013, jipmer prospectus 2014, aiims recruitment 2014, afmc recruitment 2014, ssc recruitment 2014,

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in