Wednesday, July 3, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்- I, II-க்கானஅறிவியல் வினா - விடைகள்

TET ONLINE DISCUSSION IN TAMIL
*   ஆக்குத்திசுக்கள் நிலையான திசுக்களாக மாறுதல் - செல் வேறுபடுதல்
*   தாமே பகுப்படையும் திசு - ஆக்குத்திசு
*   ஆக்குத்திசுக்களின் செல் சுவர் - செல்லுலோசால் ஆனது.
*   புரோகேம்பியத்திலிருந்து தோன்றுவது - முதல்நிலை வாஸ்குலார் திசுக்கள்.
*   கார்க் கேம்பியத்தினை - ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.
*   மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் - பாரன்கைமா
*   நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது - வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.
*   கோலன்கைமா - பலகோண வடிவம்

*   செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் - கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.
*   கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் - ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.
*   அடுக்கு கோலன்கைமா - டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.
*   இடைவெளிக்கோலன்கைமா - ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்
*   பிரேக்கி ஸ்கிளிரைடு - கல்செல்க்கள் (பேரியின் கனி)
*   மேக்ரோ ஸ்கிளிரைடு - கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)
*   பட்டாணியின் விதை உறை - ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)
*   Fibres நார்கள் - தாங்கு திசு
*   சைலம் நார்கள் - லிப்ரிஃபார்ம் நார்கள்.
*   சைலோஸ் என்ற சொல்லின் பொருள் - கட்டை
*   முதலாம் நிலை சைலம் - புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்
*   இரண்டாம் நிலை சைலம் - வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.
*   டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது - டிரக்கீடுகள்
*   டிரக்கீடுகளில் நீர், கனிமப்பொருட்களை கடத்த உதவுவது - வரம்புடைய குழிகள்.
*   ஒற்றைத் துளைத்தட்டு - மாஞ்சிபெரா
*   பல துளைத் தட்டு - லிரியோடென்ட்ர்ரான்.
*   ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது - சைலக்குழாய்க்கள்
*   சைலக்குழாய்கள் உடைய ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் - நீட்டம்
*   சைலம் நார்கள் - லிப்ரிஃபார்ம் நார்கள்.
*   சைலத்தில் உள்ள உயிருள்ள திசு - சைலம் பாரன்கைமா
*   புரோட்டோ ஃபுளோயம் - சிறிது காலமே உயிர் வாழும்
*   துணை செல்கள் - டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படாது.
*   ஃபுளோயம் பாரன்கைமா - டெரிடோபைட், ஜிம்னோஸ்பெர்ம்க்கள், இருவித்திலைத் தாவரங்களில் காணப்படும். (ஒரு வித்திலைத் தாவரங்களில் இல்லை)
*   ஃபுளோயம் நார்கள் - பாஸ்ட் நார்கள்
*   திசுத் தொகுப்பினை மூன்றாக பிரித்தவர் - சாக்ஸ்
*   புறத்தோலில் உள்ள புறவளரிகள் - டிரைக்கோம்க்கள ;
*   புறத்தோல் ரைசோடெர்மிசில் உள்ள சிறிய செல்கள் - டிரைக்கோபிளாஸ்ட்டுகள்.
*   காப்பு செல்களை சூழ்ந்து காணப்படுபவை - துணை செல்க்கள் (கரும்பு)
*   கன்ஜாயிண்ட் வாஸ்குலார் கற்றை - தண்டு, இலை
*   இருபக்கம் ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை - குக்கர்பிட்டேசி
*   ஃபுளோயம் சூழ் சைலம் - பாலிபோடியம்
*   சைலம் சூழ் ஃபுளோயம் - அக்கோரஸ்
*   வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.
*   பக்க வேர்கள் - அகத்தோன்ற்றிகள் - பெரிசைக்க்கிளில் இருந்து
*   இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது - பெரிடெர்ம்.
*   உறிஞ்சு உறுப்பு - வேர்த்தூவிகள்
*   வேரின் புறணியில் உள்ள கணிகம் - வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)
*   காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் - சூபரின்
*   காஸ்பாரியின் பட்டையின் பணி - வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.
*   மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு - ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.
*   ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் - வேர் (நான்கு முனை சைலம் - இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் - ஒரு வித்த்திலைத் தாவரவேர்)
*   அவரை வேரின் இணைப்புத்திசு - பாரன்கைமா.
*   வேர்த்தூவிகள் - டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.
*   ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு - பெரிசைக்க்கிள்
*   ஒருவித்திலைத் தாவரத் தண்டின் ஹைபோடெர்மிஸ் - ஸ்க்கிளிரன்கைமா
*   மக்காச்சோளத்தின் தளத்திசுவின் பணி - உணவினை சேமித்த்தல், வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுதல்.
*   கன்ஜாயிண்ட், ஒருங்கமைந்த, உள்நோக்கிய மூடிய வாஸ்குலார் கற்றை - ஒருவித்த்திலை தண்டு.
*   ஃபுளோயம் பாரன்கைமா, நார்கள் - ஒருவித்த்திலைத் தண்டில் இல்லை.
*   ஒருவித்திலைத் தண்டின் ஹைபோடெர்மிஸ் - கோலன்கைமாவால் ஆனது.
*   ஸ்டார்ச் அடுக்கு - அகத்தோலை அமைப்பால் ஒத்த்திருக்கும்.
*   பித்தினைச் சூழ்ந்து வாஸ்குலார் கற்றை வளையம் போல் அமைந்திருத்தல் - யூஸ்டீல்
*   கற்றைத் தொப்பியினை - வன்மையான பாஸ்ட் எனவும் அழைக்கலாம்.
*   ஒருங்கமைந்த, உள்நோக்கிய, திறந்த வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவரத் தண்டு.
*   மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை - ஒருவித்திலைத் தண்டு
*  மேல்கீழ் வேறுபாடுள்ள இலை - இருவித்திலைத் தாவர இலை.
*  ஒத்த அமைப்புடைய இலை - ஒருவித்திலைத் தாவர இலை.
*  இலையின் எலும்புக் கூடு - இலை நரம்புகள், சிறு நரம்புகள்
*  ஒருங்கமைந்த, மூடிய வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவர இலை.
*  வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் - இலைத்துளை
*  மீசோஃபில் என்ற சொல்லின் பொருள் - இலை இடைத்திசு.
*  பாலிசேட் பாரன்கைமாவின் பணி - ஒளிச்சேர்க்கை
*  இருவித்திலைத் தாவர இலையின் கற்றை உறை - பாரன் கைமாவால் ஆனது.
*  கியூட்டிகிளின் பணி - நீராவிப்போக்கினை குறைத்தல்.
*  பித்தின் பணி - உணவினைச் சேமித்தல்.
*  ஆப்பூ வடிவ வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவர தண்டு.
*  ஒருவித்திலைத் தாவரத் தண்டின் கற்றை உறை - ஸ்கிளிரன் கைமாவால் ஆனது.

செல் உயிரியல் மற்றும் மரபியல்
*  திடீர் மாற்றத்தின் முக்கியத்துவங்களை எழுதுக.
*  புதிய சிற்றினங்கள் தோன்றுவதற்கும், பரிணாம வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
*  செயற்கை திடீர் மாற்றங்கள் கால்நடை, விவசாயம் போன்ற துறைகளில் பயனுள்ளதாக உள்ளது.
*  புதிய பயிர் ரகங்களை தோற்றுவிற்க உதவுகிறது.
*  ஜீனின் நுண் அலகுகளை அறிந்து கொள்ள உதவுகிறது.
*  பல வகை திடீர் மாற்றங்கள் மனிதர்களில் பரம்பரை நோய்களயும் புற்று நோய்களையும் தோற்றுவிக்க காரணமாக உள்ளது.

புள்ளி திடீர் மாற்றம் பற்றி குறிப்பு வரைக.
*  ஒரு சிறிய DNA பகுதியில் உள்ள ஒரு நியூக்ளியோனடடு (அ) நியூக்ளியோடைடுகளில் ஏற்படும் மாற்றம் - நீக்கல் திடீர் மாற்றம்:
*   ஒரு இணை நியூக்ளியோடைடு இழக்கப்படுவதால் ஏற்படுவது - சேர்த்தல் திடீர் மாற்றம்:
*   ஒன்று (அ) அதற்கு மேற்ப்பட்ட நியூக்ளியோடைடுகள் சேர்வதால் ஏற்படுவது -  பதிலீடு திடீர் மாற்றம்:
*   DNA வில் உள்ள நைட்ரஜன் காரங்களுக்கு பதிலாக வேறொரு காரம் இணைவது . ஒத்த பதிலீடு:
*   பியூரின் (அ) பிரிமிடின் பதிலாக வேறொரு பியூரின் அல்லது பிரிமிடின் இணைவது - வேறுபட்ட பதிலீடு:
பியூரினுக்கு பதிலாக பிரிமிடினும், அல்லது பிரிமிடினுக்குப் பதிலாக பியூரினும் இணைவது.
*   3. சிறப்பு வகை குரோமோசோம்களைப் பற்றி குறிப்பு வரைக.
பாலிடீன் குரோமோசோம்
*   1). C.G பால்பியானி என்பவரால் டிரசோபிலாவின் உமிழ்நீர்ச்சுரப்பியில் கண்டுபிடிக்கப்பட்டது.
*   இதில் கரும்பட்டை மற்றும் இடைப்பட்டைகள் மாறி மாறிக் காணப்படும்
*   இதில் பெரிய புடைப்பு போன்ற பகுதி உண்டு. இது பால்பியானி வளையம் என்று அழைக்பப்படுகிறது.
*   இக்குரோமசோம் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் காணப்படுவதால் அது உமிழ்நீர் சுரப்பி

விளக்கு தூரிகை குரோமோசோம்:
*   பிளமிங் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
*   விளக்கு கண்ணாடியைத் துடைக்க உதவும் தூரிகை போன்றது.
*   விலங்குகளின் ஊசைட்டுகளில், மியாசிஸ் செல்பிரிதலின் போது காணப்படுகிறது.
*   குரோமோசோம் மிகவும் சுருங்கி தடிப்பற்று, குரோமோசோம் அச்சாக மாறுகிறது.
*   அதிக அளவு RNA உண்டாக்கப்படுவதால் இந்த DNA வளையங்கள் பக்க வாட்டில் நீட்சியுற்றுக் காணப்படும்.

tRNA அமைப்பை விவரி
*   tRNA குளாவர் இலை வடிவில் காணப்படும்.
*  1965-ல் R.W. ஹோலி என்பவர் கண்டுபிடித்தார்.
*   இதில் நான்கு கரங்கள் காணப்படுகின்றன. அவை:
அ. எதிர் சங்கேத கரம் ஆ. D கரம் இ. TψC கரம் ஈ. அமினோ அமிலத்தை ஏற்கும் கரம்.
*   tRNA மூலக் கூறுகள் 73-93 ரிபோ நியூக்ளியோடைடுகளால் ஆனது.
*   சில tRNA க்களில் இந்த நான்கு கரங்களுடன் மற்றொரு கரமும் உண்டு. அது மாறுபடும் கரம் என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in