
பிரிவு வாரியான காலி இடங்கள்: யு.பி.எஸ்.சி, அமைப்பு நடத்தும் துணை கமாண்டண்ட் தேர்வு மூலமாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸில் (பி.எஸ்.எப்.,) 110 இடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் போர்ஸில்(சி.ஆர்.பி.எப்.,) 138 இடங்களும், சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸில் (சி.ஐ.எஸ்.எப்.,) 56 இடங்களும், இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் (ஐ.டி.பி.பி.,) 120 இடங்களும் சேர்த்து மொத்தம் 424 அஸிஸ்டெண்ட் கமாண்டண்ட் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள் என்னென்ன: இந்தக் காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2013 அன்று 22 வயது நிரம்பியவராகவும், 25 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிகள் பாதுகாப்புப் பணி தொடர்புடையவை என்பதால் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும் என்பதை நினைவில் வைக்கவும்.
மற்ற விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி தேர்வு, மருத்துவத் தரம் அறியும் சோதனை போன்ற பல கட்ட தேர்ச்சி முறைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற வேண்டும்.
மற்றவை: யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட தேர்வு தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களின் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.200/-ஐ ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையிலோ அல்லது நெட்பேங்கிங் முறையிலோ அல்லது கிரெடிட்மற்றும் டெபிட் கார்டு வாயிலாகவோ
கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 05.08.2013
இணையதள முகவரி : www.upsc.gov.in/exams/notifications/2013/capf/eng.pdf
No comments:
Post a Comment