Sunday, July 14, 2013

Nuclear Power Corporation Recruitment 2013 - நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் குஜராத் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகளும் காலி இடங்களும்: என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஸ்டைபண்டரி காலி இடங்கள் டிப்ளமோ ஹோல்டர், பி.எஸ்.சி., ஹோல்டர், பிளாண்ட் ஆபரேட்டர், பிட்டர் - மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் முதல் பிரிவில் 21 இடங்களும், இரண்டாவது பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்: முதல் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். டிப்ளமோ ஹோல்டர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது கெமிக்கல் பிரிவில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று வருட டிப்ளமோ படிப்பை தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி., படிப்பை இயற்பியல் அல்லது வேதியியலில் முடித்திருக்க வேண்டும். 
பிளான்ட் ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் முடித்திருக்க வேண்டும். மெஷினிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் அல்லது மெஷினிஸ்ட் பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ.,யும், எடை குறைந்த பட்சம் 45.05 கிலோவும் இருக்க வேண்டும். 
பிற தகவல்கள்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 31.07.2013க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் : 31.07.2013
இணையதள முகவரி: www.npcil.nic.in/main/JobsRecent.aspx

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in