Sunday, July 28, 2013

SSC Central Govt recruitment notification - Last Date:16/08/2013(எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள மத்திய அரசு பணிவாய்ப்பு)

ssc recruitment 2014
மத்திய அரசின் பணி இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு தேர்வுகளை நடத்தி காலிப் பணி இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2013 ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் எக்ஸாம் எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 01.08.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் 02.08.1986 முதல் 01.08.1995க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இதே தேதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் பிளஸ் 2 அளவிலான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக

முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திரு நெல்வேலி மற்றும் புதுச்சேரி மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.
இதர தகவல்கள்: ஸ்டாப் செலக்சன் கமிஷனின் கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பங்களை நிரப்பி உரிய மண்டல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR),
Staff Selection Commission,
EVK Sampath Building, 2nd Floor, 
College Road, Chennai,
Tamil Nadu - 600006 
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 16.08.2013
இணையதள முகவரி: http://ssc.nic.in/notice/examnotice/CHSLE&013%20draft%20Notice%20.pdf

3 comments:

  1. Hw can i apply in online ,?
    below link is not yet support,please suggest me.

    ReplyDelete
    Replies
    1. try this :
      http://ssconline.nic.in/

      further jobs updates :
      tamilnaduvelaivaippu.blogspot.in
      thank you

      Delete
  2. im a BE completed student.. i can apply for this ae????/

    ReplyDelete

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in