Sunday, July 28, 2013

NIT Trichy announcement for Special Training- NEEDED ITI ELECTRICIAN QUALIFICATION (திருச்சி என்.ஐ.டி., அறிவித்துள்ள சிறப்புப் பயிற்சி)

nit recruitment 2014
இந்தியாவின் புகழ் பெற்ற நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பக் கல்விப் பிரிவில் உலகப் புகழ் வாய்ந்து திகழ்கின்றன. இவற்றில் ஒன்றின் கிளை தமிழ் நாட்டின் திருச்சியில் அமைந்துள்ளது.
முன்பு ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் (ஆர்.இ.சி.,) என்ற பெயரில் இயங்கி வந்த இந்த கல்வி நிறுவனம் தற்போது என்.ஐ.டி., என்ற பெயர் மாற்றம் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி வழங்கப்படும். ஒரு ஆண்டு காலத்திற்கு இந்த அப்ரென்டிஸ் பயிற்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிக்கு தேர்ந்து

எடுக்கப்பட்டால் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க இருக்கும் அப்ரென்டிஸ் பயிற்சியில் பங்கு பெற வேண்டியிருக்கும்.
மற்ற தகவல்கள்: மாதம் ரூ.5 ஆயிரம் உடன் கூடிய அப்ரென்டிஸ் பயிற்சியாகும் இது. என்.ஐ.டி., க்கு இந்தியா தவிர்த்து சர்வ தேச அளவில் பெயர் இருப்பதால் இங்கு அப்ரென்டிஸ் பயிற்சி பெறுவது எதிர்கால பணி வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கு பெற விரும்பினால் உங்கள் தொடர்பு முகவரி, இ-மெயில் முகவரி, மொபைல் எண்ணுடன் கூடிய முழுமையாக நிரப்பப்பட்ட உங்கள் பயோ-டேடா படிவத்தை பின்வரும் முகவரிக்கு 05.08.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இந்த கல்வி நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு இ-மெயில்/தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது. வரும் 12.08.2013 அன்று நேர்காணல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
முகவரி:
The Registrar, 
Kind Attention: HOD / EEE 
National Institute of Technology, 
Tiruchirappalli - 620 015, 
Tamil Nadu, India.

0r
www.nitt.edu

TAGS: NIT Trichy announcement for Special Training ,NIT Trichy announcement for Special Training last date , latest special training at trichy nit, trichy niit recruitment 2014, latest nit trichy jobs, nit trichy jobs 2014, nit 2014 jobs in tamilnadu, tamilnadu nit training notification download 2014, 

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in