Monday, July 8, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - தாள் - II

TET ONLINE DISCUSSION IN TAMIL
வழிகாட்டுதலும் அறிவுரை பகர்தலும் - Guidance and Counselling
*  ஒருகுழந்தைக்கோ, ஒரு மாணவனுக்கோ, தனி மனிதனுக்கோ தன்னை பற்றியும், நன்கு புரிந்து கொள்ள அளிக்கப்படும் உதவியே - வழிகாட்டல்.
*  மாணவர் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு பணிகளின் (அறிவுரை பகர்தல் உள்பட) தொகுப்பே வழிகாட்டல் என்று கூறியவர் - ஹேய்ட்
*  வழிகாட்டுதல் என்பது ஒரு உதவி செய்தல் (Helping Process) பொருட்டாகும்
*  வழிகாட்டல் என்பது ஒருவரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் செயல்முறையாகாது.
*  பிரச்சனை உள்ளவரே தன் பிரச்சினையின் தன்மையை உணர்ந்து அதை அவரே தீர்த்துக் கொள்ள உதவுவது - வழிகாட்டல்

*  ஒருவர் தனது வீடு, பள்ளி. சமுதாயம் ஆகியவற்றில் உயரளவு இணக்கத்தோடு நடந்து கொளவதற்குத் தேவையான தன்னையறிதல் (Self Understanding) தன்னைத் தானே நெறிப்படுத்திக் கொள்ளுதல் (Self Direction) ஆகிய இரு பண்புகளை எட்டுவதற்கு உதவும் நி்கழ்வே - வழிகாட்டல்.
*  ஒரு மாணவன் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கும், திறமைக்கேற்ற வேலையில் சேர்ந்து அதில் முன்னேற்றம் அடையவும், சூழ்நிலையில் பொருத்தப்பாடுடன் செயல்பட்டு சமூக *  இணக்கமுள்ள நடத்தையைப் பெறுவதர்கும் வழிகாட்டல் உதவுகிறது.
கல்வியில் வழிகாட்டல் ஏன் தேவை?
*  ஒவ்வொரு பள்லியிலும், கல்லூரிகளிலும் என்னென்ன படிப்புகல் உள்ளன என்பதை அறிந்து கொள்ள
*  *  மாணவர்கள் தங்களின் கவர்ச்சி, நாட்டம் ஆற்றலுக்கான  பிரிவினை, மேல்நிலைக்கல்வி, தொழில்நுட்பக் கல்வியில் தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுத்த பரிவில் பெற்றி பெறுவதற்கும்.
கல்வி தொடர்பான தனிப்பிரச்சனைகளைத் தீா்ப்பதற்கும்.
*  மாணவர்களின் சாதனையைத் தடுக்கும் காரணிகளைப் (மனமுறிவு) போக்கி, இசைந்த ஆளுமை வளர்ச்சி பெறுவதற்காகவும் - கல்வி வழிகாட்டல் தேவைப்படுகிறது.
*  கல்வில் வழிகாட்டல்
*  மாணவர்கள் திறமையாகக் கற்கவும், படிப்பினைத் தேர்ந்தெடுக்கவும், மேற்பட்ட கல்வி அடைவை எட்டுவதில் எதிர்ப்படும் இடர்பாடுகளை அகற்றவும் கல்வியில் வழிகாட்டல் உதவுகிறது.
தொடக்கக் கல்வி நிலையில் - கல்வி வழிகாட்டலில் - மூன்று இலக்குகள்
1. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான அனைத்து நல்ல அடிப்படைகளை அளித்தல்
2. தொடக்க நிலையில் எழும் வீணான தேக்கத்தைத் தவிர்த்தல்
3. பள்ளிக் கல்வியின் முழுப்பயனையும் மொத்தமாகப் பெறக் குழந்தைகளுக்கு உதவுதல்
*  சரியான மாணவனைச் சரியான படிப்பிலும், சரியான தொழிலிலும் அமர்த்தவல்லது - கல்வி வழிகாட்டல்
*  ஒருவர் மனநிறைவோடும், திறமையோடும் ஒரு தொழிலைச் செய்து தன்னையும், சமுதாத்தையும் உயர்த்திடத் தொழில் வழிகாட்டல் உதவுகின்றது.
*  ஒரு மாணவர் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் படிப்பை முடித்த பின்பு அவரது திறமை, செயலாற்றல், நாட்டம், மனப்பான்மை, விருப்பம், அறிவாண்மை ஆகிவற்றிற்குத் தகுந்தவாறு சரியான தொழிலைத் தேர்ந்தெடுத்து சேர உதவுதல் - தொழில் வழிகாட்டல் எனப்படும்.
*  தொழிலில் வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகிக்கும் சோதனை - நாட்டச் சோதனை
*  பள்ளியில் பயிலும் ஒரு மாணவரின் உடல்நலம், உளநலம் மனவெழுச்சிக் கட்டுப்பாடு, பயிலும் பழக்கம், கற்கும் முறைகள், கற்றவைகளை நினைவில் இருத்தல் போன்ற சொந்த பிரச்சனைகளைத் *  தீர்த்து வைக்க உதவுதல் - தனிப்பட்ட வழிகாட்டல் எனப்படும்.
*  தனிப்பட்ட வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகிக்கும் சோதனை - நாட்டச் சோதனை
*  சிறந்த வழிகாட்டி யார்? - ஆசிரியர்
*  மாணவருடைய வாழ்வில் வழிகாட்டி மையப்பங்கு கொள்பவர் - ஆசிரியர்
*  வழிகாட்டல் - கல்வியின் செயல்படு பகுதி ஆகும்.
*  வழிகாட்டல் மற்றும் அறிவுரை பகர்தல் ஆகிய இரண்டின் பொருளும் ஒன்றல்ல.
*  வழிகாட்டலின் ஒரு பகுதி (அ) வழிகாட்டலின் மையப் பொருள் - அறிவுரை பகர்தல்
*  தீவிரப் பிரச்சனைக்கு ஆட்பட்டவருக்கு, சிறப்புப்பயிற்சி பெற்றவரால், நேருக்குநேர், தனித்த சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படும் வழிகாட்டுதலே - அறிவுரை பகர்தல் எனப்படும்.
*  வழிகாட்டல் பணியின் இதயம் - அறிவுரை பகர்தல் (அ) ஆற்றுபடுத்தல்
*  நேர்முக அறிவுரை பகர்தல் (Direction Counselling) (அ) நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல் (அ) அறிவுரை பகர்பவரை மையாமாகக் கொண்ட அறிவுரை பகர்தல்
*  இதனை தோற்றுவித்தவர் - E.G.வில்லியம்சன்
*  இம்முறை இளஞ்சிறார்களுக்கும், தீவிர நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்கும் பயன்படும்.
*  நேர்முக அறிவுரை பகர்தலிலுள்ள படி - ஆறு
1. பகுத்தறிதல் 2. தொகுத்தறிதல் 3. குறையறிதல் 4. வருவதுரைத்தல் 5. அறிவுரை பகர்தல் 6. பின்தொடர் செயல்
*  நேர்முக அறிவுரை பகர்தல் பிரச்சனையை மையமாகக் கொண்டது.
*  மறைமுக அறிவுரை பகர்தல் (Non - Direction Counselling) (அ) தன்னெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல் (அ) நெறிசாரா அறிவுரை பகர்தல்
*  இம்முறையை தோற்றுவித்தவர் - கார்ல் -ஆர். ரோஜர்ஸ்
*  இது அறிவுரை பெறுபவரை மையமாக கொண்ட முறை.
*  நெறிசாரா அறிவுரை பகர்தலை வளர்ச்சி சார் செயல் என்று கூறுகிறார்கள்.
*  மறைமுக அறிவுரை பகர்தல் - தீவிர நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்கும், இளஞ்சிறார்களுக்கும், நுண்ணறிவு குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏற்றது அல்ல.
*  மாணவரிடம் தற்சார்புத் தன்மையை வளர்க்கும் முறை - தன்னெறிப்படுத்தும் அறிவுரை பகிர்தல்
*  அறிவுரை பகர்தலில் சமசரமுறை (Electric Counselling) (அ) பொது நிலை அறிவுரை பகர்தல் இம்முறையை தோற்றுவித்தவர் - F.C. தார்ன்.
*  வழிகாட்டல் ஒரு தனிப்பட்ட மாணவரை மையமாக வைத்து நிகழ்கிறது. ஆனால் அறிவுரை பகர்தலோ அம்மாணவரின் தனிப்பட்ட பிரச்சனையை மையமாக வைத்து நிகழ்கின்றது.
*  வழிகாட்டல் - ஆசிரியரே வழங்கலாம், ஆனால் அறிவுபகர்தலை மேற்கொள்ள சிறப்புப் பயிற்சி பெற்றவர் தேவை.
*  வழிகாட்டலின் மையப் பொருள் - தனிநபர்
*  இடைநிலைப் பள்ளியில் அறிவுரை பகர்தல் என்ற நூல் - J.w. லகாரி
*  மாணவர் அறிவுரை பகர்தலில் பயிற்சிகளும் பண்புகளும் என்ற நூல் - F.B.ராபின்சன்
ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பணியை எவ்வாறு மேற்கொள்கிறார்கள்? -
1. மாணவர்களைப் பற்றிய தகவல் திரட்டும் பணி. 2. தகவல் பரப்புப் பணி 3. அறி்வுரை பகர்தல் பணி 4.. வழிகாட்டல் மையம் 5. வேலையில் அமர்த்தும் பணி 6. பின் தொடர் பணி
*  அறிவுரை பகர்தலில் இடம் பெறும் செயல்களின் வரிசை பற்றி கூறியவர் - நியூஸம்
*  அறிவுரை பெறுபவரே, உட்காட்சி வழியே தன்னுடைய பிரச்சனைக்கான தீர்வை அடைவது எவ்வகை அறிவுரை பகர்தல் ?  மறைமுக (நெறிசாரா அறிவுரை பகர்தல்)
*  ஒருவித நெகிழ்வுத் தன்மை காணப்படும் அறிவுரை பகர்தல் எது? அறிவுரை பகர்தலின் சமரச முறை
*  இன்றைய கல்விச் சூழலில், வழிகாட்டுபவர்களில் பெரும்பாலோர் மேற்கொள்ளும் அறிவுரை பகர்தல் எது? அறிவுரை பகர்தலின் சமரச முறை
*  இன்றைய கல்விச் சூழலில். வரிகாட்டுபவர்களில் பெரும்பாலோர் மேற்கொள்ளும் அறிவுரை பகர்தலில் எது? - (அறிவுரை பகர்தலில் சமரசமுறை)
*  அறிவுரை பகர்தலில் உள்ள இரு உத்திகள்: 1. தனிநபர் முறை 2. குழு முறை
*  தனிநபர் அறிவுரை வழங்குதல் உத்தியில் உள்ள மூன்று முறைகள்: 1. நேரடி அறிவுரை பகர்தல் 2. மறைமுக அறிவுரை பகர்தல் 3. சமரச அறிவுரை பகர்தல்
*  4 முதல் 6 பேர் வரை உள்ள சிறு குழுவினர் தங்களுது பொதுப் பிரச்சனைகளைப் பற்றி விவாதித்து ஆற்றுப்படுத்திக் கொள்ளும் செயல்பாடுகள் - குழுவாக அறிவுரை பெறுதல் (அ) குழு ஆற்றுப்படுத்துதல்
*  குழுமுறையில் - பயிற்சி பெற்ற வல்லுநர் இருப்பார்.
*  குழு முறையில் - ஆற்றுப்படுத்தும் அமர்வுகள் எத்தனை? - (4-6)
*  யாருடைய கருத்துக்கள் அதிக செல்வாக்கு பெற்றவை என்று (குழுமுறையில்) உளவியல் ஆய்வுகள் கூறுகிறது? - ஒத்த தன்மையுடையோர் கருத்துக்கள்)
*  ஆற்றுப்படுத்துதலுக்கான (அறிவுரை பெறுதலுக்கான) அடிப்படை எது? - புரிந்துணர்வு
*  தீவிர பிரச்சனைகளுக்கு ஆட்பட்டு மனக்குழப்பத்தில் உள்ளோருக்கு எவ்வகை அறிவுரை பகர்தல் சாலச்சிறந்தது? - தனிநபர் அறிவுரை பகர்தல்
*  பிரச்சனை நடத்தை உடைய மாணவனை ஆசிரியர் எப்படி காணுவார்?  தொடர் உற்று நோக்கல்
*  நுண்ணறிவு ஈவு - 120 - 139 - மீத்திறமிக்கவர்கள் (அ) மீத்திறக்குழந்தைகள்
*  மீத்திறக்குழந்தைகள் (Gifted Children) எத்தனை சதவீதம் உள்ளனர்? 3 முதல் 5 சதவீதம்.
*  மீத்திறக் குழந்தைகளின் இருவகைகள் எவை?
1. பொது ஆற்றல் மிக்க குழந்தைகள்
2. இசைக்கலையில், ஒவியக் கலையில் மீத்திறம் பெற்றவர்கள்
*  மீத்திற குழந்தைகளை - உயர் அறிவாண்மைக் குழந்தைகள் என்று அழைப்பர்.
*  உயர் அறிவாண்மைக் குழந்தைகளிடம் உள்ள மூன்று உயர் திறமைகள் - சென்சலி
1. உயர் அறிவாண்மை 2. உயர் செயலூக்கம் 3. உயர் ஆக்கத்திறமை
*  மீத்திற குழந்தைகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வீர்கள்? - அறிவாண்மைச் சோதனைகள் (தனியாள் நுண்ணறிவு சோதனை)
ஆக்கத்திறன் சோதனைகள்
*  பள்ளிப்பாடத் தேர்வுகள் (கல்வி அடைவு சோதனை)
*  கவர்ச்சி வினா வரிசை
*  எந்த குழந்தைகளை சரியாகக் கையாளவிட்டால் அவர்கள் பெற்றொருக்கும், ஆசிரியருக்கும் பெரும் தலைவலியாக மாறுவார்? - மீத்திற குழந்தைகள்
*  உயர் அறிவாண்மைக் (மீத்திற குழந்தை) குழந்தை குழந்தைகளுக்கான கல்வித்திட்டம் - வளமைக் கல்வி திட்டம், விரைவுக்கல்வி திட்டம், குழுவகைத் திட்டம்
*  ஆற்றல் வழி வகைப்படுத்துதல் முறைப்படி - தனிப்பிரிவு - கல்வி வழங்குதல்
துரிதப்பிரிவு மாற்றல் முறை
*  பாடத்திட்டத்தை அதிகரிக்கும் முறை
*  வசதி குறைந்த மீத்திறகுழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பது (நவோதயாப்பள்ளிகள்)
*  கல்வியில் பின்தங்கியோர் (அ) மெதுவாக கற்போர்
*  *  நுண்ணறிவு ஈவு 70 - 89 வரை இருக்கும்
*  வகுப்பில் 8 சதவீதம் - 10 சதவீதம் இருப்பர்
*  தனது வயதுகேற்ற கல்வி வளர்ச்சியில் 2 (அ) அதற்கு மேலோ தங்கியவர்கள் - கல்வியில் பிற்பட்டவர்கள் ஆவர் - ஸிரில்பர்ட்
*  குறையறி சோதனை, குறைதீர் கற்பித்தல் முறை கல்வியில் பின்தங்கியவருக்கு உகந்தது.
*  கல்வியில் பிற்பட்டவர்களின் - கல்வி ஈவு - 85 -க்கும் குறைவாக இருக்கும்.
*  மாணவனது அடைவு வயதுக்கும், கல்வி வயதுக்கும் உள்ள விகிதம் - கல்வி ஈவு = அடைவு வயது / கால வயது X 100
*  கல்வியில் பின்தங்குவதற்கான காரணங்கள்: 1. மரபுநிலை காரணிகள் 2. சூழ்நிலைக் காரணிகள்
*  மரபுநிலைக் காரணிகளால் ஏற்படும் தாக்கம் தீவிரமானது, முழுமையாக சீரமைகக் முடியாதது.
*  கல்வியில் பின்தங்கியோருக்கு உதவ பள்ளிகளில் நிறுவப்பட வேண்டியது - வழிகாட்டும் விடுதிகள்
*  குறைநிறைச் சாதனையாளர்கல் (அ) திறமைக்கேற்ற சாதனை அடைவு இல்லாத குழந்தைகள்
*  நுண்ணறிவுக் கெழு 100 (அ) அதற்கு மேல் இருக்கும்.
*  அதிகமான அறிவாண்மை ஈவு பெற்ற மாணவர்கள், தங்களின் அறிவாண்மை ஈவுக்கு ஏற்றாற் போலின்றி மிகவும் குறைவான மதிப்பெண்கள் பெறுதல்.
*  குறைந்த சாதனைக்கு காரணம், சூழ்நிலைக் காரணிகள், ஊக்கக்குறைவு
*  திறமையிருந்தும் குறைசாதனையுடையோராகத் திகழ்வதற்கான காரணங்கள் - நான்கு
1. குடும்பச் சூழ்நிலை 2.சுற்றுப்புறச் சமுதாயம் 3. பள்ளிச் சூழ்நிலை 4. மாணவர் தனிப்பண்புகளுடன் தொடர்புடைய காரணிகள்
*  குறை சாதனை உடையோரை அறிய உதவுவது - மாணவர் திறள் பதிவேடு
*  திறமையிருந்தும் குறைசாதனையுடைய குழந்தைகளை வீறு கொண்டு எழுச்சியுறச் செய்யும் அருமருந்து - ஆசிரியரின் தனிக்கவனம், அரவணைப்பும்
*  கற்கும் திறமை குறைவான குழந்தைகள்
*  வாசித்தல் திறமை, கணக்குப் போடுதல் போன்ற கற்றல் திறன்களில் குறைபாடு கொண்டு இருப்பர்.
*  15 சதவீதம் உள்ளனர்.
*  உடல் - இயக்க குறைபாடு காணப்படும்
*  கை - கால் உதறிக் கொண்டே இருக்கும்.
*  டெர்மன் சோதனையில் 1508 மீத்திறம் வாய்ந்த குழந்தைகள் தொடர்ந்து 30 ஆண்டுகள் சோதிக்கப்பட்டனர்.
*  மீத்திற மாணவர்களுக்கு ஏற்ற தேர்ச்சி முறை - இரட்டை வகுப்புத் தேர்ச்சி திறள்.
*  குழு அறிவுரை பகர்தல் - குமரப்பருவத்தினருக்கு உகந்த அறிவுரை பகர்தல் முறை ஆகும்
*  பட்லிபாய் என்பவர் தொழில் வழிகாட்டல் அலுவலகத்தை கொல்கத்தாவில் 1941ல் ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in