Sunday, July 14, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் - II PART I

TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION
ஸ்கின்னரின் கற்றல் கட்டுப்பாடுகள்
* கற்பவரின் செயலை வலுப்படுத்திட ஒரு தூண்டல் இருத்தல் வேண்டும்.
* கற்பவர் செயலை வெளிப்படுத்தியவுடன் அத்தூண்டல் வழங்கப்படுதல் வேண்டும்.
* செயல் வெளிப்பட்டு ஒவ்வொரு முறையும், அத்தூண்டல் தொடர்ந்து பலமுறை வழங்கப்படுதல் வேண்டும்.
உட்காட்சி வழிக் கற்றல் - Learning by Insight
* முதன்முதலில் வெளியிட்டவர் - கோஃஹலர்
* இவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்.
* கெஸ்டால்ட் எனும் உளவியல் பிரிவைச் சேர்ந்தவர்.
* சுல்தான் எனும் மனிதக் குரங்கை வைத்து சோதனை செய்தார்.
* கற்றல் என்பது வலுவூட்டும் தூண்டலால் நிகழும் நடத்தை அல்ல என்பதை கோஃஹலரின் கருத்தாகும்.
* பிரச்சனைக்குரிய தீர்வு திடீரென சில உண்மைகளின் புலன் காட்சின் அடிப்படையில் தோன்றுவது. கோஃஹலரின் உட்காட்சி எனப்படும்.
* இதன் அடிப்படையில் அமைவது மனிதக் கற்ரலும், விலங்குக் கற்றலும் ஆகும்.
* கூண்டில் உள்ள பெட்டிகளை உட்காட்சி மூலம் அடுக்கியும், குச்சிகளை இணைத்தும் வாழைப்பழத்தை சுல்தான் என்னும் குரங்கு எடுத்தது.
உட்காட்சி கற்றலை பாதிக்கும் காரணிகள்
1.கற்பவரின் நுண்ணறிவு
2.முன் அனுபவங்கள்
3.பிரச்சனை தோன்றும் முறை
4.ஆரம்ப முயற்சி
கற்றல் மாற்றம் (அ) பயிற்சி மாற்றம் - Transfer of Learning
* முன்பு கற்ற ஒன்று தற்போது ஒன்றினில் மாற்றத்தை ஏற்படுத்துவது கற்றல் மாற்றம் எனப்படும்.
* முன்பு கற்றலைத் தற்போது கற்றுக் கொளவதிலும், தற்போது கற்கின்ற ஒன்று முன்பு கற்றதிலும் சில விளைவுகளை ஏற்படுத்துவது கற்றல் விளைவு எனப்படும்.
* ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு, செயல்திறன், பழக்க வழக்கங்கள், மனப்பான்மை போன்ற எந்த அளவைக் கூறும் வேறொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் * செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவதே கற்றல் மாற்றம் எனப்படும்.
* கற்றல் மாற்றத்தின் வகைகள் - Types of Transfer of Learning
கற்றல் மாற்றம் 3 வகைப்படும்.

1. நேரடிக் கற்றல் மாற்றம் (Positive Transfer)
* முன்பு கற்ற ஒரு பாடம் (அ) செயல் வேறொரு புதிய பாடத்தினை கற்க உதவுவது நேரடிக் கற்றல் மாற்றம் எனப்படும். (எ.கா. டென்னிஸ் விளையாடக் கற்றவனுக்கு கைப்பந்தாட்டம் விளையாட கற்பது எளிதாக அமைவது.)
2. எதிர்மறைக் கற்றல் மாற்றம் - Negative Transfer
* முன்பு கற்ற ஒரு பாடம் (அ) செயல் வேறொரு பாடம் (அ) செயலை கற்க தடையாக அமைவது. (எ.கா. பிறமொழிகளைக் கற்பதில் தாய்மொழியின் பாதிப்பு.)
3. பூச்சிய, சூன்ய கற்றல் மாற்றம் - Zero Transfer
* முன்பு கற்ற ஒரு பாடம் (அ) செயல் வேறொரு பாடம் (அ) செயலை கற்கும்போது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. (எ.கா. கணித அறிவும் இசையில் உள்ள புலமையும்.)
பின்பற்றல் வழிக் கற்றல் - Learning by Imitation
* பாண்டுரா எனும் உளவியல் அறிஞர் வெளியிட்டார்.
* பிறரது நடத்தையைப் பார்த்து அதே போன்று தங்களுது நடத்தையினை மேற்கொள்ளுதல். (எ.கா. குழந்தைகளின் மொழிவளர்ச்சி)
* வேறொருவரின் கற்பனைப் படைப்பை நாமும் உணர்ந்து அனுபவித்து பின்பற்றும் ஆக்கக் கற்பனை எனப்படும்.
கற்றல் மாற்றத்திற்கான கோட்பாடுகள்
1.முறையான கட்டுப்பாட்டுக் கொள்கை (அ) மனக் கட்டுப்பாட்டு கொள்கை - Theory of Formal Disciplinar
* கற்கும்போது என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதை விட எவ்வாறு கற்றுக் கொள்கிறோம் என்பது முக்கியம். அதன் அடிப்படையில் அமைந்ததே இக்கொள்கை.
* சில அடிப்படைப் பாட் இயல்புகளைக் கற்பது மற்ற எல்லாப் பாட இயல்புகளையும் எளிதில் படிக்க வழிகோலும்.
* இக்கோட்பாட்டை கிரேக்க அறிஞர் பிளாட்டோ முன்வைத்துள்ளார்.
* மனக்கட்டுப்பாட்டுக் கொள்கையை உண்மையென வாதிட்டார் வில்லியம் ஜேம்ஸ்.
2. தார்ண்டைக்கின் ஒத்தகூறு கோட்பாடு - Theory of Identical Elements
* பொருட்கள், நிகழ்ச்சிகள், செயல்கள் மற்றும் பாடங்கள் இடையே ஒரே மாதிரி ஒத்த குணங்கள் இருக்கும்போது எளிதில் கற்றல்மாற்றம் ஏற்படுகிறது.
* இக்கோட்பாட்டை ஆதரித்தவர்கள்: தார்ண்டைக், வுட்வொர்த்.
* இக்கோட்பாட்டின்படி உண்மைத்தன்மையை விளக்க முடியாதவர் - க்ளென்.
3. பொதுமைப்படுத்துதல் கொள்கை - Theory of Generalization
* சி.ஹெச்.ஜட் என்பவரால் 1908ல் வெளியிடப்பட்டது
* பொதுவான தன்மையுடைய செயல்கள் மற்றும் பாடங்கள் இடையே எளிதில் கற்றல் மாற்றம் நடைபெறுகிறது.
* ஜட்டின் கொள்கைப்படி பள்ளிப்படிப்பில் குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை கற்பதைவிட, பயனுள்ள பல பொது விதிகளை கற்பிக்க வேண்டும்.
4. தொடர்பு மாற்றக் கோட்பாடு -Theory of Transposition
* கெஸ்டால்ட்(Gestalt) என்பவரால் வெளியிடப்பட்டது.
* புதிய பொருட்கள், செயல்கள், நிகழ்ச்சிகளைக் கண்டறிந்து ஏற்படுகிறது. புதிய சூழ்நிலையில் முடிவு காண பயன்படுத்தும்போது கற்றல் மாற்றம் ஏற்படுகிறது.
* ஒரு நிலையில் காணப்படும் பண்புகளை வேறொரு நிலைமைக்கு மாற்றும் பயிற்சியே மாற்றத்தின் அடிப்படை.
* தொடர்பு மாற்றக் கோட்பாட்டின் அடிப்படை - உட்காட்சி (Insight)
* இவை மாற்றியமைத்தல் சோதனைகள் எனப்படும்.
* காக்னே பயிற்சி மாற்றத்தை 2 வகையாகப் பிரிக்கின்றார்.
* பக்க மாற்றம் - நேரடியாக பிரச்சனைக்கு விடைகாண்பது.
* செங்குத்து மாற்றம் - புதிய முறையில் விடை காண்பது.
5. குறிக்கோள் கோட்பாடு - Theory of Ideals
டபுள்யு.சி.பேக்லி
* கற்க நாம் கையாளும் முறைகளை குறிக்கோள் நிலைக்கு உயர்த்தினால் நாம் எதைக் கற்கத் தொடங்கினாலும் பயன்படும்.
காக்னே படிநிலைக் கற்றல் கோட்பாடு - Theory of Hierarchial Learning
* ராபர்ட் எம்.காக்ளே, அமெரிக்க நாட்டு உளவியல் அறிஞர்.
* பள்ளிக் குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் என்பதை விளக்க ஒரு கற்றல் கோட்பாட்டை உருவாக்கினார். அது அடுக்குக் கற்றல் கோட்பாடு எனப்படும்.
* அடுக்குக் கற்றல் பலபடி நிலைத்தன்மை உடையது.
* உயர்நிலையில் உள்ள கற்றல் நிகழ வேண்டுமெனில் அதன் கீழ்நிலையில் உள்ள கற்றல் வகைகளை நன்கு கற்றுத் தேர்ந்திருப்பது அவசியம்.
* கற்றல் என்பது நடத்தையும், சிந்தனையும் உள்ளடக்கிய ஒரு செயல்.
காக்னேயின் கற்றல் பாதை
* குறியீட்டுக் கற்றல்
* தூண்டல்-துலங்கள் கற்றல்
* தொடர் செயல் கற்றல்
* சொல் இணைத்துக் கற்றல்
* வேறுபடுத்திக் கற்றல்
* கருத்துமைக் கற்றல்
* விதியைக் கற்றல்
* பிரச்சனையைத் தீர்க்கக் கற்றல்
நினைவு - Remembering
* நாம் கற்ற விசயங்களை மனதில் தங்க வைத்து தேவைப்படும் போது பயன்படுத்த உதவுவது.
* நமது சிந்தனை மற்றும் காரண காரியங்களை ஆராய்வது நினைவைப் பொறுத்தே அமையும்.
* சிறப்பான கற்றல் அமைய நல்ல நினைவு அவசியம்.
நினைவு கூர்தலின் படிநிலைகள்
* உட்வொர்த் என்பவர் 4 படிநிலைகளைக் குறிப்பிடுகின்றார்.
* 1. பகுதிக் குறியீடுகளை வைத்து நினைவு கூர்தல்
* 2.மீண்டும் கொணர்தல்
* 3.அறிந்து கொள்ளுதல்
* 4.திரும்பக் கற்றல்

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in