Sunday, July 7, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - தாள் - II PART I

TET ONLINE DISCUSSION IN TAMIL
மனநலம் மற்றும் மனநலவியல் - Mental Health and Hygiene
மனநலம் - Mental Health
*  மனநிறைவுடன், மனமுதிர்ச்சியுடன், மனநிலைச் சமன்பாட்டுடன், பொருத்தப்பாட்டுடன், பிறரோடு இணைந்து செயல்பட்டு தானும் பிறரும் மகிழ்ச்சிடையும் விதத்தில் செயல்படும் நிலையினை மனநலம் என்கிறோம்.
*  ஹேட்பீல்டு - மனலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான, இசைவான செயற்பாட்டைக் குறிக்கின்றது.
*  மார்கன், கிங் - ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் (Behaviour Disorder) எதுவுமின்றி, பிறரோடு இணைந்து போகும்.
மனநலமிக்கவனின் பண்புகள்:
*  உள நலமிக்கவனை, உளவியலார் பொருத்தப்பாட்டைப் பெற்றவன் என்றழைக்கின்றனர். மனநலமிக்கவன் அமைதியும், மகிழ்ச்சியும் பெற்று வாழ்கிறான்.

*  மனப்போராட்டங்கள், இவனைப் பாதிப்பதில்லை. ஏனெனில் இவை தோன்றியவுடன் இவற்றைத் தீர்க்க இவன் முயல்கிறான்.
*  தனது திறன்கள், குறைபாடுகள் இவற்றை உணர்ந்து செயல்படுகிறான்.
*  பிறருடன் ஒத்துழைத்து நண்பர்களைப் பெறுகிறான். இது அவனுக்கு குறிக்கோளுக்கேற்ப செயல்படுகிறான்
*  இத்தகையோன் கற்பனை உலகில் வாழாமல், உண்மையுலகிலேயே வாழ்பவனாவான்.
*  மனவெழுச்சி சமன்பாட்டையும், சமுக முதிர்ச்சியையும் கொண்டவன். மனமுறிவைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவன்.
மனநலம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்:
*  இன்றைய வாழ்க்கை முறை தேவைகள் பெருகி, சிக்கல் மிகுந்ததாக மாறியுள்ளது.
*  போட்டி, பூசல்கள் பெருகிக் கவலைகள், அச்சங்கள், மனவிறைப்பு நிலை ஆகியவர்றைப் பெருக்கியுள்ளன.
*  காப்புணர்ச்சி யாவரிடமும் குறைந்து காணப்படுகிறது.
*  குடும்பம், சமயம் போன்றவற்றின் செல்வாக்கு மங்கியுள்ளது. இவற்றின் காரணமாக மனிதன் மனமுறிவுகளுக்கும், மனப்போராட்டங்களுக்கும் ஆட்பட்டு, * 
பொருத்தப்பாட்டின்மை நடத்தை உள்ளவனாக ஆக்கப்படுகிறான். இதனால் உடல்நலமும், உள நலமும் பாதிக்கப்படுகின்றன.
மனநலம் தீர்மானிக்கும் காரணிகள் -4
1. மரபு வழிக்காரணிகள்
2. உடல் நலக்காரணிகள்
3. வீடு, பள்ளி, அண்டை அயலார், சமூகம்
4. குழந்தைப் பருவத்தில் அடிப்படைத் தேவைகளில் திருப்தி.
மனநலத்தின் வெளிப்படையான அறிகுறிகள்
1. உற்சாகமான மனநிலை
2. நல்ல உறக்கம்
3. உணவில் திருப்தி
*  சிகிச்சையின் மூலம் நல்ல மனநலம் அடையும் ஆய்வு - பீனல்
*  மனவியல் இயக்க தந்தை - க்லிபர்டு பீர்ஸ் - அமெரிக்கா - A mind Commitee for mental health - வாஷிங்டன்  - சர்வதேச மனவியல் சபை.
மனநிலைகள் - 3 பிரிவுகளைக் கொண்டது
1. ஆக்க நிலை - Positive Aspect
2. தடை செய்யும் நிலை - Preventive Aspect
*  இரண்டு காரணங்கள் - 1. முன்பின் அறியாத காரணம் 2. அவசரக் காரணம்
3. நோய் குணப்படுத்தும் நிலை - Curative Aspect
மனநிலைகள் - Mental Hygiene
*  மக்களிடையே மனக்கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கவும், மனநலத்தைப் பேணி மனநோய்களிலிருந்து விடுபடச் செய்வதற்கும் செயல்படும் அறிவியே மனநலவியலாகும்.
மனப்போராட்டங்கள்
*  ஒருவனது மனம் சரியான முடிவெடுக்க இயலாத நிலையையே மனப்போராட்டம் என்கிறோம்.
*  மனப்போராட்டம், மனமுறிவினால் ஏற்படுகிறது.
*  மகிழ்ச்சியற்ற நிலையையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது.
*  மனமுறிவும், மனப்போராட்டமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை.
மனப்போராட்டங்களுக்கான காரணங்கள்
1. ஒர் ஆதார குழுவினின்றும் திடீரென வழிநிலை சமூகக் குழுவிற்குச் செல்பவனுக்கு
2. ஒருவன் எதிர் நோக்கியுள்ள இலக்குக்கும், அவன் உண்மையில் பெற்ற அடைவுக்கும் இடையே பெரும் வேறுபாடு எழுவதால்
3. ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத பல இலக்குகளை வாழ்க்கையில் அடைய முயலுவதால்
மனப்போராட்டங்களின் வகைகள்
1. அணுகுதல் - அணுகுதல் மனப்போராட்டம்
இதில் இரண்டு நேர் ஊக்கிகள் பங்கு பெறுகின்றன. G <- C -> G+
2. அணுகுதல் - விலகுதல் மனப்போராட்டம்
இதில் ஒரு நேர் ஊக்கியும், ஒரு எதிர் ஊக்கியும் பங்கு பெறுகின்றன. G -> C -> G+
3. விலகுதல் - விலகுதல் மனப்போராட்டம்
இதில் இரண்டு எதிர் ஊக்கிகள் சம வலிமையுடன் செயல்படும். G -> C <- G+
மனமுறிவு - Frustration
*  மார்க், கிங் ஆகியோர் கருத்துப்படி, ஒரு குறிக்கோளை (தேவை, விருப்பம் போன்றவற்றை) அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனமுறிவு ஏற்படுகின்றது.
*  மனமுறிவு என்பது செயலைச் செய்யவிடாமல் தடுத்தல் அல்லது செய்யாத நிலையில் ஏற்படும் மனநிலையாகும்.
*  மனித தேவைகள், விருப்பங்கள், ஊக்கிகள், உள் உந்தல்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று தடைப்படும்போது அல்லது அவற்றுக்கு இடையூறு ஏற்படும் போது மனமுறிவு ஏற்படுகிறது.
மனமுறிவு தோன்ற இரு முக்கிய காரணிகள்:
1. அகக்காரணிகள் 2. புறக்காரணிகள்
*  மனமுறிவிற்கான காரணங்கள் - 3
1. துலங்களை வலுப்படுத்துதல் நிறுத்தல்
*  துலங்கள் முறையாக ஏற்பட்டுப் பின்னர் மறைதல் நிலையையே தாமதித்தலால் ஏற்படும் மனமுறிவு என்கிறோம்.
2. துலங்கலுக்கு இடையூறு செய்தல்
3. மனப்போராட்டங்கள் நிகழ்தல்
*  மனத்தேவைகளும், சமூகத்தேவைகளும் நிறைவேறாத சமயங்களில் மனமுறிவு, மனப்போராட்டம் எழும்.
*  குமரப்பருவத்தினரை இவை பெருமளவில் பாதிக்கும்.
மாணவரிடையே மனக்குழப்பங்கல் - Unrest
*  ஒருவனது தேவைகள் நிறைவேறாத நிலையில் ஏற்படும் விறைப்பு நிலை, மனமுறிவு, மனப்போராட்டம் போன்றவைகளால் ஏற்படும் மனநிலையே மனக்குழப்பம் ஆகும்.
மனக்குழப்பத்திற்கான காரணங்கள்:
1. மனமுறிவும் போராட்டமும்
2. ஏழ்மை நிலை
3. வேலையில்லாத் திண்டாட்டம்
4. மதிப்புக்குறைத்தல்
5. கல்வி முறையிலுள்ள குறைபாடுகள்
6. ஆசிரியர் - மாணவர் உறவில் மாற்றம்
7. அரசியல் குறுக்கீடுகள்
8. அதிகாரமுள்ள நிர்வாகம்
9. வகுப்பு வேறுபாடுகள் (இன)
*  மனமுறிவினைத்தரத்தக்க நிலையில் ஒருவன் எவ்வாறு செயல்படுகிறான் என்பதனை முக்கியமாக 5 காரணிகள் நிர்ணயிக்கின்றன.
1. உடல்நலம்
2. வயது
3. முந்தைய அனுபவம்
4. தடைப்பட்ட ஊக்கியின் தன்மை
5. அவாவுநிலை
மார்கஸ், கிங் - மனமுறிவு படம்
O மனிதன் + குறிகோள்கள் - தடைகள் -----> சுற்றுப்புறச் சூழல்
மார்கன், கிங் ஒருவரின் மனமுறிவுக்கு 3 காரணங்கள்
1. சுற்றுச்சூழல்
2. திறமைக்குறைவு
3. மனப்போராட்டம்

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in