Tuesday, July 2, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள் -I, II க்கான வரலாறு வினா - விடைகள் 1

TET ONLINE DISCUSSION IN TAMIL

*  இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள்கள்
*  சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
*  கல்வியைப் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்;.
*  இராணுவச் செலவுகளை குறைக்க வேண்டும்.
*  இந்தியர்களை உயர்பதவிகளில் நியமிக்க வேண்டும்.

*  வேலூர் கலகம்
*  இந்து வீhர்கள் நெற்றியில் சமயக் குறிகளை இடக்கூடாது என்றும், முஸ்லீம் வீரர்கள் தாடி மீசைகளை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். என்ற
கட்டுப்பாடுகள் வேலூர் கலகத்திற்கு வழி வகுத்தது.

*  1806 ஜீலை 9ல் திப்புவின் மகள் திருமணத்தின் போது வீரர்கள் ஆங்கிலேயர்களைத்தாக்கி வேலூர் கோட்டையைக் கைப்பற்றினர்.

*  நீதிக்கட்சியின் ஆட்சி
*  1920 திரு.சுப்பராயலு தலைமையில் ஆட்சி அமைத்தது
*  1923 ல் திரு.டி.எம்.சிவஞானம் பிள்ளை தலைமையில் ஆட்சி அமைத்தது
*  1926 - மற்றும் 1930 ல் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றது.
*  பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்பட காரணம்
*  வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுத்தடை சட்டத்தை எதிர்த்து போராடினார்.
*  இறுதியில் திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடைச்சட்டத்தை தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்க்குள் நுழையலாம் என அறிவித்தது. எனவே இவர் வைக்கம் வீரர் எனப்பட்டார்.
*  தேவதாசி முறை ஒழிப்பிற்கு முத்துலட்சுமி ரெட்டியின் போராட்டம்
*  தேவதாசி முறையை ஒழிக்க தன் வாழ் நாள் முழுவதையும் அர்பணித்தார்.
*  தந்தை பெரியார், திரு.வி.க. இருவரும் இவரது கருத்தை ஆதரித்தனர்
*  எனவே, நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.

* காமராஜரின் நலத்திட்டப் பணிகள்
* மதிய உணவுத் திட்டம்
* புதிய பள்ளிகளைத் திறந்து இலவச கல்வி வழங்குதல்
* வேளாண்மையை மேம்படுத்துதல்
* கால்வாய்களைக் கட்டுதல்
* அணைகளைக் கட்டுதல்
* தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நலத்திட்டங்களை மேற்கொண்டார்

*  பிளாசி மற்றும் பக்சார் போர்
* 1757 -ம் ஆண்டு வங்காளத்தின் நவாப்பாக இருந்தவர் - சிராஜ் உத் தெளலா.
* துணைப் படைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர் - வெல்லெஸ்லி பிரபு
* டல்ஹெளசி பிரபுவின் கொள்கை - வாரிசு இழப்புக் கொள்கை
* விக்டோரியா மகாராணியின் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு -  நவம்பர் 1, 1858

*  ஜெர்மனியின் போராசை
* முதல் உலகப்போரின் போது ஜெர்மனியின் அரசர் - கெய்சர் இரண்டாம் வில்லியம்
* அவரின் நம்பிக்கை - உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை மற்றும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது என அவர் நம்பினார்.
* அவரால் சகித்துக் கொள்ள முடியாதது - ஆங்கிலேயர்களின் பேரரசில் சூரியன் மறைவதே இல்லை என்ற கூற்றை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
* எங்கு கப்பற்படை தளம் அமைத்திருந்தார் - ஹெலிகோலாண்ட்

*  உடனடிக்காரணம்
* பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது - கி.பி.1908.
* ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் - பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்
* அவருக்கு நேர்ந்தது - செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
* ஆஸ்திரேலியா என்ன செய்தது - ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டது

போரின் போக்கு
* முதல் உலகப் போரின் காலம் - கி.பி.1914 – கி.பி 1918
* மைய நாடுகள் - ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்
* நேச நாடுகள் - இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்
* போரில் உபயோகபடுத்தப்பட்ட போர் கருவிகள் - பிரங்கிப்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்

சர்வதேச சங்கம்
* சர்வதேச சங்கத்திற்கு முன் தோன்றிய சில சர்வதேச அமைப்புகளின் பெயர்கள் - 1. சர்வதேச சமுதாயம், 2. உலக அமைதி கூட்டமைப்பு, 3. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்
* சர்வேத சங்கத்தின் தலைமையகம் - ஜெனிவா
* உறுப்பு நாடுகள் தங்கள் பிரச்சனைகளுக்கான - சர்வதேச சங்கத்தின் மூலம் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்
* ஜப்பான் எப்போது மஞ்சூரியாவைக் கைப்பற்றியது - 1931

மத்திய இந்தியாவில் பெரும் புரட்சி?
* மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் - ஜான்சிராணி இலட்சமிபாய்
* ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் - குவாலியர்
* இராணி இலட்சுமிபாயின் முடிவு - 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்
* தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது - கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

பிரம்ம சமாஜம்
* பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் - இராஜராம் மோகனராய்
* இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் - அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு
* இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் - ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
* பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை - ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை

8. ஆரிய சமாஜம்
* சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் - மூல்சங்கர்
* சுவாமி சரஸ்வதியின் குரு - சுவாமி விராஜனந்தா
* வாமி தயானந்த சரஸ்வதியின் கொள்கை - வேதங்களை நோக்கிச் செல்
* ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது - பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.

பிரம்ம ஞான சபை
* பிரம்மஞான சபையை நிறுவியவர் - மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.
* பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? - கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது
* 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் - திருமதி. அன்னிபெசன்ட்
* பிரம்மஞானசபையின் தலைமையகம் - சென்னையில் உள்ள அடையார்

இராமகிருஷ்ண மடம்
* இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்?
கோவில் அர்ச்சகர்
* இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?
சுவாமி விவேகானந்தர்
* உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்
* உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?
சுவாமி விவேகானந்தர்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
* தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
* இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்
1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது
* மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?
தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.

ஏகாதிபத்தியம் ஏற்படக் காரணங்கள்
* 1.தொழிற்புரட்சி:
தொழிற்புரட்சி காரணமாக உற்பத்தி அதிகரிப்பு.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சந்தை மற்றும் மூலப்பொருளுக்காகப் பயன்படுத்துவது.
* 2. தேசியப் பாதுகாப்பு:
நாட்டின் செல்வத்தை அயல்நாட்டில் முதலீடு செய்வது. பாதுகாப்பிற்க்காக அந்த நாடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.
* 3. தேசிய மயமாக்கல்:
வளர்ச்சி குன்றிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது கருப்பின மக்களுக்கு நாகரிகம் கற்று தருவது தங்களின் பெருமை எனக் கருதுவது.
* 4. சமநிலை ஆதிக்கம்:
சமநிலை ஆதிக்கம் பெற அண்டை நாடுகளுக்கு இணையாக குடியேற்ற நாடுகளை ஏற்படுத்த முயல்வது.
* 5. புதிய வழித்தடங்கள் கண்டுபிடிப்பு:
குடியேற்ற நாடுகளின் செல்வத்தை சுரண்ட உதவியது.

முசோலிளியின் தலைமையில் பாசிசம் படைத்த சாதனைகள்
* சிறந்த தலைவர்.
* இத்தாலியை வலிமை பொருந்திய நாடாக மாற்ற முயன்றார்
* அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டினார்
* தொழில் பட்டயம் தொழிலாளர்களின் நலனுக்காக வெளியிடப்பட்டது
* பொருள் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை திறமையான நிர்வாகி
* 1929-ல் போப்புடன் லேட்டரன் உடன்படிக்கை. போப் அரசரின் மேலாண்மையை அங்கீகரித்தார்.

இரண்டாம் உலகப்போரின் விளைவுகள்
* 50 மில்லியன் மக்கள் இறப்பு
* இத்தாலி ஜெர்மனியில் சர்வாதிகார ஆட்சி முடிவு
* போரில் அமெரிக்கா ஜப்பானைக் கைப்பற்றியது
* அமெரிக்கா, ரஷ்யா உலகில் முதல் தர நாடுகளாக உருவாதல்
* ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரப் போராட்டம் தொடக்கம்
* ஏகாதிபத்திய கொள்கை கைவிடப்பட்டது.
* அமைதி மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டது

பிரம்ம சமாஜம்
* இராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை தோற்றிவித்தார்.
* பல மொழிகளை அறிந்தவர்.
* பல நூல்களை எழுதியவர் முகாலாய மன்னரால் இராஜா என்ற பட்டத்தை பெற்றவர்.
* இவர் சமுதாயத்தில் காணப்பட்ட பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களை நீக்க பாடுபட்டார்.
* கடவுள் ஒருவரே என்ற கொள்கை, ஆடம்பர சடங்கு, உருவ வழிபாடு, தீண்டாமை மற்றும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தார்.

1920 - 1922 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் படிநிலை
* முதல்நிலை: ஆங்கில அரசிடம் இருந்து பெற்ற பதவி, பட்டம், விருது துறப்பு.
* இரண்டாம் நிலை: அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சட்டமன்ற நடவடிக்கை புறக்கணிப்பு.
* மூன்றாம் நிலை: வரி செலுத்த மறுப்பது.

நீதிக்கட்சியில் தோற்றம் மற்றும் சாதனைகள்
* தோற்றம்: 1916 ஆம் ஆண்டு டி.எம். நாயர் மற்றும் தியாகராய செட்டியாரால் தோற்றுவிப்பு.
* 1920 தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பு.
* திரு. சுப்பராயலு, திரு.டி.எம். சிவஞானம்பிள்ளை தலைமையில் ஆட்சி பிறகு ப. முனிசாமி நாயுடு தலைமையில் ஆட்சி.
சாதனை:
* சாதி அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிராமங்கள் முன்னேற்றம் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்தியது.
உயர்க்கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்துவது.
* ஆந்திரா, அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குதல் பெண்களுக்கு வாக்குரிமை, தேவதாசி முறைஒழிப்பு, வன்கொடுமை தடைச்சட்டம், இயற்றுதல், இலவச
வீட்டுமனைத் திட்டம், இலவச மதிய உணவுத் திட்டம்
* 1944ல் சேலத்தில் நடந்த மாநாட்டில் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என பெயர் மாற்றினார்.

1900 – 1920
1905 – வங்காளப் பிரிவினை
1906 – முஸ்லீம் லீக் தோற்றம்
1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
1918 – முதல் உலகப்போரின் முடிவு
1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை
1920 – ஒத்துழையாமை இயக்கம்

1920 – 1930
1920 – கிலாபத் இயக்கம்
1922 – சௌரி சௌரா இயக்கம்
1930 – தண்டி யாத்திரை
1927 – சைமன் குழு வருகை
1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்

1930 – 1940
1930 - முதல் வட்டமேசை மாநாடு
1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு
1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு
1935 - இந்திய அரசு சட்டம்
1939 - இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்
1940 - ஆகஸ்டு நன்கொடை

1940 – 1950
1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு
1946 - இடைக்கால அரசு அமைப்பு
1947 - இந்தியா சுதந்திரம் அடைதல்
1950 - இந்தியா குடியரசு ஆகுதல்

2 comments:

  1. Get TNPSC Annual Planner 2019 here. Applicants can check Upcoming TNPSC Exams Schedule & Notification. More details about Tamil Nadu Govt Jobs Latest News.

    ReplyDelete
  2. Abroad jobs -Latest Job Vacancies In Albertsons Companies, Inc USA

    Latest Job Vacancies

    Store Keeper,Sales,Drivers,Cashier,Cleaner,Bar Attendants,Fruit Packers,Truck Drivers,Welder,Engineer,Hotel workers,Farmers,House keeping,Security guards,Drivers,Assistant Manager,Housekeeping Supervisor,Shuttle driver,Electrical,Accountant,Plumber,Factory worker,General Helper,Call center agent,All Jobs are available at one point so Job Seekers can easily find their dream jobs

    Employment Status:

    • A private accommodation with a furnished sitting room and bedroom
    • A Fixed landline and an Internet ready computer
    • Free Lunch Feeding
    • Free medical care
    • Allowance $850 Dollars
    • Salary: Up to $12,500 Dollars

    Any Fresher or graduate with Sales experience

    Sex: Male / Female

    Education: Minimum Graduation + MBA (Added Advantage)Communication

    Skills: Smart Communicator in English & Hindi (Punjabi,Tamil will be added advantage)

    You must possess a valid international passport before you apply for this job

    Working Hours:10:am to 5:pm
    Status:Full Time Job
    Location: United States Of America

    Any Interested candidate should please Upload Your Resume Today Email: albertsonscompaniesinc456@gmail.com

    Albertsons Companies
    Email: albertsonscompaniesinc456@gmail.com

    ReplyDelete

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in