Friday, July 12, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - தாள் - II PART I

TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION
சமூக, மனவெழுச்சி மற்றும் ஒழுக்க வளர்ச்சி - Social, Emotional and Moral Development
சமூக வளர்ச்சி:
*  ஒருவர் மற்ரவர்களுடன் கொண்டிருக்கும் உறவுகளே சமூக வளர்ச்சி எனப்படும்.
*  சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதலே - சமூக வளர்ச்சி - ஹர்லாக்
*  குழந்தைகளிடம், சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதல் - சமூக நெறிப்படுத்தும் செயல்முறை
*  குழந்தை பிறக்கும் போது மிருக சிகிச்சையுடன் இருக்கும்.
*  மனிதர்களுக்கு மட்டுமே உள்ள வளர்ச்சிகள்: 1. சமூகவியல்பு வளர்ச்சி 2. ஒழுக்க வளர்ச்சி
*  சமூக வளர்ச்சியின் இரண்டு கூறுகள்: 1. சமூக உணர்வு பெற்றுத் திகழ்தல் 2. சமூகச் செயல்களில் பொறுப்புடன் பங்கேற்றல்
*  சமூக வளர்ச்சி என்பது தம் பணிபுகளை ஏற்று தன்னைச்சுற்றி வாழும் பிறருடன் இணங்கிப் போக வளரும் குழந்தைகள் பெறும் பயிற்சியின் விளைவு ஆகும்.
*  சமூக வளர்ச்சி, சமூகவியல் பின்னாதல் (Socialization) எதை பொறுத்து அமையும்? - குழந்தைகளின் மனஎழுச்சி வளர்ச்சியை பொறுத்தது.

*  சமூக கற்றல் கொள்கை - ஆல்பிரட் பாண்டுரா (பின்பற்றி கற்றல்)
*  சமூக வளர்ச்சியானது வயதின் அடிப்படையில் பல படிநிலையில் அமைகிறது.
*  சமூக வளர்ச்சி வளரும் சூழல், ஏற்படும் அணுபவங்களை பொறுத்தது.
*  சமூக வளர்ச்சியில் தான் என்ற உணர்வு - ஒரு வயது குழந்தை
*  குழந்தை பருவம் (0 - 4) - பயம் போன்ற உணர்வுகள் இருக்காது.
*  பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி அதன் உடல் தேவைகளைப் பொறுத்து தான் அமையும்.
*  தான் சார்ந்த சமுதாயம் ஒத்துக் கொள்ள கூடிய நம்பிக்கைகள், மதிப்புகள், நடத்தைகள் போன்றவற்றை பெற்று சமுதாயத்தோடு இயைந்து வாழக் கற்றலே - சமூகவியல்
பின்னாதல் (அ) சமூகவியல்பினைப் பெறுதல் எனப்படும்.
*  சமூக வளர்ச்சி - பள்ளிக் சூழலை (சமுதாயம்) பொறுத்தே அமைகிறது.
*  பெற்றோரை முழுவதும் சார்ந்த பருவம் - குழவிப்பருவம்.
*  கூட்டாளிக்குழுப் பருவம் (Gang Age) - பிள்ளைப் பருவம்
*  சிறு குழந்தைகளின் சமூக வளர்ச்சி எழற்றுடன் தொடர்புடையது? 1. உடல் வளர்ச்சி 2. அறிவு வளர்ச்சி
*  எரிக்சனின் - சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு
*  ஒழுக்க வளர்ச்சி நிலை - கோல்பர்க்
*  ஹர்லாக் - 10 வளர்ச்சி நிலைகள்
*  சமூக முதிர்ச்சிக்கான அடையாளம் - தலைமைப்பண்பு
*  ஆற்றல்மிக்க சமூக நிறுவனமே - பள்ளி

*  எரிக்சனின் 8 வளர்ச்சி நிலைகள்:
சமூக வளர்ச்சி நிலை    - சமூகச் செல்வாக்குகள்  - பிரச்சனைகள்
1. குழவிப்பருவம்(0-1)     - தாய், செவிலியர்       - நம்பிக்கை (அ) நம்பிக்கையின்மை
2. குழந்தைப் பருவம்(1-3) - பெற்றோர்              - சுதந்திரமாக இயங்குதல், ஐயப்பாடு
3. விளையாட்டுப் பருவம்(3-5) - ஆதாரக்குடும்பம்   - தானே முற்பட்டு செயலாற்றல், குற்ற உணர்வு
4. பள்ளிப் பருவம்(6-12)  - சுற்றுப்புறம், பள்ளி       - உற்சாக உழைத்தல் (அ) தாழ்வு மனப்பான்மை
5.குமரப்பருவம்      - ஒப்பார் குழு, பிற குழுக்கள் விரும்பும் தன்மை - தன்னைப்பற்றிய நிலையான கருத்து (அ) தெளிவற்ற குழப்பமான கருத்து
6. முன் முதிர்பருவம் (20-30) - நண்பர்கள், பால் தொடர்பு உறுப்பினர்கள் - நெருக்கமான உறவும், ஒருமைப்பாட்டு உணர்வுகள்(அ) தனிப்பட்ட நிலை
7. நடுமுதிர்பருவம் (30-60) - பொறுப்புகள், குடும்ப கடமைகளை பகிர்ந்து கொள்வோர் - தன்னுள் ஒடுங்கிச் செயல்படுதல்
8. பின்முதிர் பருவம் - மனித இனம், நம் இனம் - நேர்மை, முழுமையான நம்பிக்கை இழப்பு

*  சமூக வளர்ச்சி, சமூகவியல்பினை அடைதல் ஆகியவற்றின் இறுதி இலக்கு - சமூக முதிர்ச்சி.
*  குழந்தைகளின் சமூக, மனவெழுச்சியை பாதிக்கும் காரணிகள்:
1. நேரடியான காரணிகள் - (i) மரபணுக் குறைபாடுகள், (ii) சரியான கவனிப்பின்மை
2. மறைமுக காரணிகள் - (i). ஒத்த வயதினரோடு பழகும் வாய்ப்பு மறுக்கப்படுதல். (ii). ஒரு குழந்தை குடும்பத்தில் எத்தனையாவது இடத்தில் உள்ளது.
(iii). கலாச்சார மாறுபாடு. (iv). குறைவான, தாமதமாகும் மொழி வளர்ச்சி.

சமூக மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு உதவும் காரணிகள்
1. அன்பு, அரவணைப்பும். 2.பாதுகாப்புணர்வு 3. பிற குழந்தைகளோடு ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு.

மனவெழுச்சி வளர்ச்சி - Emotional Development
*  மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிளையே - மனவெழுச்சி
*  நெருக்கமான சூழலில் மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலையே மனவெழுச்சி என்று கூறியவர் - ஸ்பிட்ஸ்.
*  உடலையும், மனத்தையும் கிளர்ச்சி அடையச் செய்யும் நிலையை மனவெழுச்சி என்றவர் - பிரட்ஜஸ்
*  பொதுப்படையான உள்ளக் கிளர்ச்சி - மகிழ்ச்சி, துயரம்
*  முதன்மை (அ) அடிப்படை மனஎழுச்சிகள்
*  சினம், வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சரியம், பயம், தாழ்வுணர்ச்சி
*  பிறப்பிலேயே கட்டமைக்கபட்டவை அடிப்படை, முதன்மை மனவெழுச்சி
*  இரண்டாம் நிளை (அ) சிக்கலான மனவெழுச்சி
*  குமரப்பருவத்தில் குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு
*  அச்சம் - பிறவியிலிருந்து தோன்றக்கூடிய ஒரு மனவெழுச்சி ஆகும்.
*  சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
*  பொறாமையில் ஒரளவு அச்சமும், சினமும் அடங்கியுள்ளன.
*  பொறாமை - குழந்தை பிறந்து ஒரிரு ஆண்டுகள் வளர்ச்சியுற்ற பின்னரே எழுகிறது.
*  கூச்சம் (அ) நாணம் - தாழ்வுச் சிக்கலைக் காட்டுகிறது.
*  மனவெழுச்சி வளர்ச்சிக்கு அடிப்படையான இரண்டு காரணிகள் - 1. கற்றல் 2. முதிர்ச்சி
*  பிள்ளைப் பருவத்தில் அதிகமாக இருக்கும் மனவெழுச்சி - அச்சம் (அ) பயம்
*  அச்சத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்தவர் - லோடன்
*  மனவெழுச்சிகளில் முக்கியமானது - கோபம்
*  குழந்தைகள் எந்த நேரத்தில் கோபம் கொள்கின்றனர் என்ற ஆய்வு - ரிக்கெட்ஸ்
*  சந்தோஷமற்ற மனவெழுச்சி - பொறாமை
*  மனித மனவெழுச்சிகள் இயல்பூக்கங்களிலிருந்து உருவாகுபவை என்றவர் - மக்டூகல்
*  இயல்பூக்க நடத்தையின் மூன்று கூறுகள் - 1. அறிவு 2. உணர்வு 3. உடலியக்கம்
*  மனவெழுச்சிகள் எப்போது உருவாக செயல்படும்? - அடிப்படை தேவை நிறைவேறும் போது (அ) இடர்களால் தடைப்படும் போது
எர்க்ஸ் - பிட்சன் விதி
*  குறிப்பிட்ட ஒர் எல்லை வரை மனவெழுச்சி அதிகரித்தல், சாதனையைத் தூண்டி அதிகரிக்கச் செய்யும், அதற்கு மேல் அது சாதனையில் குறுக்கிடும்.
*  ஒர் மனவெழுச்சி எழுவதற்கான காரணம் மறைந்த பின்னரும் தொடர்ந்து செயற்படுவது - மனவெழுச்சி நீட்சி
*  மனவெழுச்சிகள் மூன்று பரிமாணங்களில் பரவி காணப்படுகின்றன என்றவர் - ஹெரால்டு ஷால்ஸ்பர்க்

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in