Sunday, May 5, 2013

அலகாபாத்தில் உள்ள துப்பாக்கி தளவாடத் தொழிற்சாலையில் 82 பணிகள் 2013


உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் உள்ள துப்பாக்கி தளவாடத் தொழிற்சாலையில், பல்வேறு பணிகளில் 82 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Chargeman II, Telephone Operator, Store Keeper, Mazdoor, LDC, Pharmacist, சமையல்காரர், தீயணைப்பு வீரர், சலவைக்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். LDC பணிக்கு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பை முடித்ததுடன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சலவைக்காரர், மஸ்தூர், பார்பர், சமையல்காரர் போன்ற
பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு 18 முதல் 35 வரை என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், உரிய கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆவணங்களுடன் வரும் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, Commandant OD FORT ALLAHABAD - 908 778, UTTAR PRADESH.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது சுய விவரங்களை, ஏப்ரல் 20-ஆம் தேதி வெளிவந்துள்ள வேலைவாய்ப்புச் செய்திதாளில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் நிரப்பி அனுப்பவும்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in