Monday, May 6, 2013

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ஆதார செல் ஆராய்ச்சி மையம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு 2014


இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டெம்செல் எனப்படும் “ஆதார செல் ஆராய்ச்சி  மையம்” ஒன்றை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்  6 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட  உள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை முதலைமைச்சர் ஜெயலலிதா வாசித்தார்.
அதில், கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகள் நன்கு  பராமரிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்  நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மறு சீரமைப்பு மருத்துவம்:
கால்நடைகளுக்கு ஏற்படவிருக்கும் நோய்களிலிருந்து அவற்றை காப்பாற்றி, அவைகள் ஆரோக்கியத்துடன் வாழ, தற்போது பயன்பாட்டில் உள்ள இதர மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்த இயலாத நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்ட, ஆதார செல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மறு சீரமைப்பு மருத்துவம் என்ற ஒரு புதிய மருத்துவ முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மேலும், இந்தப் புதிய மருத்துவ முறை  இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஆதார செல்கள்:
உலகம் முழுவதும் மருத்துவ சிகிச்சை முறையானது மனிதர்களுக்கும்,
விலங்குகளுக்கும் பொதுவானதாகவே கருதப்பட்டு, “ஒற்றை சிகிச்சை கோட்பாடு”முறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“ஸ்டெம் செல்” எனப்படும் ஆதார செல்கள் கால்நடைகள் மற்றும் மனிதர்களின் கரு முட்டை, எலும்பு மஜ்ஜை, தொப்புள் கொடி உதிரம் மற்றும் கொழுப்புத் திசு போன்றவற்றிலிருந்து பிரித்து எடுக்கப்படும் முதிர்வுறா நிலையில் இருக்கும் செல்கள் ஆகும். தகுந்த ஊட்டச் சத்துக்களை கொண்டு இத்தகைய “ஸ்டெம் செல்”-களை  ஆய்வகத்தில் வளர்க்கும் போது, அவை பயன்படுத்தப்படும் காரணிகளுக்கு ஏற்ப
எலும்பு, நரம்பு, ஈரல், இதயம், சிறுநீரகம் மற்றும் ஏனைய திசுக்களாக வளரும் தன்மையை  பெறுகின்றன.
மறு சீரமைப்பு மருத்துவம் என்பது மூல  ஆதார செல்கள் மற்றும் உடலுக்கு வெளியே வளர்க்கப்படும் செல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் மருத்துவ முறையாகும். இம்மருத்துவ  முறை மூலம், நடப்பு சிகிச்சை முறைகளால் குணப்படுத்த இயலாத பல நோய்களும் குணமடைய வாய்ப்பு உள்ளது.
சிதைந்து போன உடல் உறுப்புகள்அல்லது திசுப் பகுதிகளை மீண்டும் வளர்ச்சி அடையச் செய்து, அவற்றை வழக்கம் போல் இயங்க வைப்பதே மறு சீரமைப்பு மருத்துவத்தின் நோக்கமாகும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நலத்தை பாதிக்கும் பல நோய்களுக்கு மறு சீரமைப்பு மருத்துவமே  மாற்றாக அமையும்.
ஆதார செல் ஆராய்ச்சி மையம்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அமெரிக்க
நாட்டின் மிச்சிகன் , விர்ஜினியா-மேரிலந்து, வேக்பாராஸ்ட் கல்வி நிலையங்களுடன் இணைந்து ஸ்டெம் செல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளது.
இம்மருத்துவ முறையினால் எதிர்காலத்தில் மனித மருத்துவத்திற்கும் ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டெம் செல் எனப்படும் “ஆதார செல் ஆராய்ச்சி மையம்” ஒன்றை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இதே போன்று, மனிதர்களுக்கு இணையாக மேம்பட்ட மருத்துவ சேவைகள் மற்றும் நோய் கண்டுப்பிடிப்பு முறைகள் ஆகியவற்றை கால்நடைகளுக்கும் அளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், 22 கால்நடை பெரு மருத்துவமனைகள், 20 கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலகுகள் மற்றும் 11 கால்நடை பண்ணைகள் ஆகியவற்றில் மொத்தமாக 53 அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எனப்படும்
நுண்ணொலி அலகிடும் நோய் கண்டறியும் கருவிகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்காக 8 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் ஆண்டு தோறும், 15,000 கால்நடைகள் பயன்பெறும்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in