ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் தொழில்துறை சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குருப்- 'C' பிரிவில் 764 காலிப் பணியிடங்கள் உள்ளன. Computer Fitter, Electronics Fitter, Gyro Fitter, Radar Fitter, Sonar Fitter, Weapon Fitter, Machinist, Lagger, Welder, Millwright உள்ளிட்ட 30 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்த பணியிடங்களில், பொதுப்பிரிவினருக்கு, 415 காலிப் பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 196 பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதே போல், 103 காலிப் பணியிடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், 50 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.godiwadabhartee.com என்ற இணையதளத்தை அணுகவும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:
இந்திய கடற்படை தளத்தில் விசாகப்பட்டினம் பிரிவில் உள்ள, தொழில்துறை சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்திய கடற்படை தளத்தில் விசாகப்பட்டினம் பிரிவில் உள்ள, தொழில்துறை சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிப்பவர்கள், மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்திருப்பதோடு, போதிய ஆங்கில அறிவுடனும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கு தொடர்புடைய தொழில்துறை சார்ந்த படிப்பை முடித்து, அதற்கான Apprentice பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும்.
மேலும் NAC எனப்படும் National Apprentice Certificate-ஐ, NCVT எனப்படும் National Council of Vocation Training மூலம் பெற்றிருத்தல் அவசியம். தொடர்புடைய துறையில், ராணுவம், கடற்படை அல்லது விமானப்படையில் குறைந்தது இரண்டு ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவமும் அவசியம். 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
No comments:
Post a Comment