இந்திய ராணுவத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் கூடிய பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய ராணுவத்தில் சிறப்பு நுழைவின் அடிப்படையில் பல்வேறு திறமை பெற்றவர்களையும் படைப்பிரிவில் சேர்த்து பயிற்சியளித்து பணி நியமனம் செய்து வருகிறார்கள். தற்போது 118–வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி–118) திட்டத்தின் படி, தகுதியான என்ஜினீயரிங் பட்டதாரிகளை ராணுவத்தில் இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்ற திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி திட்டத்தின் பெயர் : டெக்னிக்கர் கிரோஜூவேட் கோர்ஸ்–188
தேர்வு செய்யப்படுவோர் எண்ணிக்கை : 100 பேர்
வயது வரம்பு
இந்த பயிற்சித் திட்டத்தில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் 20 முதல் 27 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2–1–1987 மற்றும் 1–1–1994 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஆர்மி எஜுகேசன் கார்ப்ஸ் பணிக்கு 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 23 முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 2–1–1987 மற்றும் 1–1–1991 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
என்ஜினீயரிங் பணிகளுக்கு பி.இ., பி.டெக் பிரிவுகளில் என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
ஆர்மி எஜுகேசன் கார்ப்ஸ் பணிக்கு எம்.ஏ., எம்.எஸ்.சி.யில் ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், சைனிஸ், திபேதன், பர்மிஷ், புஸ்டோ, தாரி, அரபிக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு, மனப்பாங்கு திறன், நேர்காணல், உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ஸ்டேஜ்1, ஸ்டேஜ்2 முறைகளில் நடத்தப்படும். இறுதியாக மருத்துவ தேர்வு நடைபெறும்.
தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறுவார்கள். லெப்டினன்ட், கேப்டன், மேஜர், மேஜர் ஜெனரல், பிரிகேடியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வரை பதவி உயர்வு பெறும் வாய்ப்புள்ள பணிகளில் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ராணுவ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பயன்பாட்டில் உள்ள இ–மெயில் முகவரி, ஸ்கேன் செய்த புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்கவும்.
விண்ணப்பம் சமர்ப்பித்த பின் 2 கணினிப் பிரதிகள் எடுக்க வேண்டும். அதில் ஒன்றை சான்றொப்பம் செய்து இதர சான்றிதழ் நகல்கள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பயிற்சித் திட்டத்தின் பெயரையும், ரோல் நம்பரையும் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பநகல், சான்றிதழ் நகல் சென்றடைய வேண்டிய முகவரி:–
Directorate General of Recruiting (Rtg6), TGC Section, West Block-III, R.K.Puram, New Delhi - 110066
முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு ஆரம்பமாகும் நாள்: 15–5–13
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13–6–13
மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment