இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் என்ற இப்கோ நிறுவனம் 1967ல் பல்வேறு யூனிட்டுகளைக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக நிறுவப்பட்டது. உரங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை பல இடங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்வதை முதன்மையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. ஒரு கூட்டுறவு கழகமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் பினான்சியல் மேனேஜ்மெண்ட் டிரெய்னி (எப்.எம்.டி.,) பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: இப்கோ நிறுவனத்தின் நிதி நிர்வாகப் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2013 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சார்டர்டு அக்கவுண்டண்ட் (சி.ஏ.,) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்தப் படிப்பை 2010 அல்லது அதற்கு பின்னர் முடித்தவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். ஒரு ஆண்டு காலம் பயிற்சி கொண்ட இந்தப் பதவி இந்தியாவின் ஏதாவது ஒரு மையத்திலோ அல்லது எதிர்காலத்தில் இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் துவங்கப்படும் மையங்களிலோ இருக்கும் என்பதால் அங்கு பணி புரிய தயாராக இருக்க வேண்டும்.
இதர விபரங்கள்: இப்கோவின் மேற்கண்ட பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி கிடைத்து பணியில் அமர்ந்தால் 3 வருட பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். ஆன்-லைன் எழுத்துத் தேர்வு மூலமாக இந்த பணி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிகிறது. இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.08.2013
இணையதள முகவரி: click here

No comments:
Post a Comment