Thursday, August 15, 2013

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை: ஆவணம் சமர்பிக்க உத்தரவு

சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற்று வருபவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி/ எச்.எஸ்.சி/ பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.06.13 தேதியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-4, சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை பெற சென்னை-35, நந்தனம் தொழில்திறன்ற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 30.06.12 தேதியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுபித்து வருபவராகவும் 40 வயதுக்குட்பட்டவராகவும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் விண்ணப்பதாரர்கள் தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000 மிகாமல் இருப்பவராகவும் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகளுக்கு உட்பட்டவராகவும் இருப்பவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்த அளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள் சென்னை-32, கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வலாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ஏதும் தேவையில்லை.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்பித்து ஒராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR.No) ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துமந் 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுவதால், உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த மாதத்தில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை, தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் தாங்கள் வேலையில் இல்லை என்பதை உறுதி செய்வதற்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்க வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in