Wednesday, September 4, 2013

CIVIL ENGINEERING JOBS - சிவில் இன்ஜினியரிங்பணி வாய்ப்பு - Last Date : 16/09/2013

 சிவில் இன்ஜினியரிங்பணி வாய்ப்பு
துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது.

 இந்த நிறுவனம் இயற்கையாகவே மிக முக்கிய துறைமுகமான விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் (டிரெய்னி) பிரிவில் 13 சிவில் இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 


தேவைகள்: டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங் அல்லது சர்வே இன்ஜினியரிங்கில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற 2 கட்ட நிலைகளிலான தேர்ச்சி முறையை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். 
இதர விபரங்கள்: டிரெட்ஜிங் கார்ப்பரேஷனின் சிவில் இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-க்கான டி.டி.,யை DREDGING CORPORATION OF INDIA LTD., என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். இந்தப்பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு 16.09.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும். முகவரி :
FURTHER DETAILS :
Dy.Manager (HR) (CM/IR),
DCI Limited, "Dredge House'',
Port Area,
Visakhapatnam - 530 001
இணையதள முகவரி: click here
CIVIL ENGINEERING JOBS - சிவில் இன்ஜினியரிங்பணி வாய்ப்பு - Last Date : 16/09/2013, tn velai vaippu news updates 2014, tamilnadu employement news 2014, latest tn govt employment news, tamilnadu employement news 2013, 


No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in