Tuesday, May 1, 2012

சாதிவாரி கணக்கெடுப்பின்போது எந்தெந்த பிரிவுகளில் பதிவு செய்ய வேண்டும்?!

சாதிவாரி கணக்கெடுப்பின்போது எந்தெந்த பிரிவுகளை பதிவு செய்யவேண்டும் என்று அந்தந்த சமுதாய அமைப்பின் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக தினந்தோறும் பல்வேறு சாதி அமைப்புகளும் பத்திரிக்கைகளில் விளம்பரங்களும் செய்து வருகின்றனர்.

பார்க்கவ குலம்

இது குறித்து பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டி.ஆர்.பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரையும் ஒன்று சேர்க்க மத்திய அரசால் எடுக்கப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு நல்ல வாய்ப்பு. இவ்வாறு பதிவு செய்தால் நமது சமுதாயத்தின் பலத்தை அரசுக்கு தெரியப்படுத்தலாம். இதுவரை இழந்த அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பெரிதும் பயன்படும்.

எனவே, இந்த கணக்கெடுப்பை நமது சமுதாயத்தினர் அனைவரும் முறையாக பயன்படுத்தி உட்பிரிவுகளை தவிர்த்து கண்டிப்பாக ஒரே மாதிரியாக சமுதாய பொதுச் பெயரான பார்க்கவ குலம் என்றே பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடார்

தட்சணமாற நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரர்களான நாடார்கள், கால மாற்றத்தில் ஒடுக்கப்பட்டு மீண்டும் எழுச்சி பெற்று உழைப்புக்கு உதாரணமாக திகழும் நாடார்கள் பல உட்பிரிவுகளில் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க அரசு எடுத்து வரும் சாதி வாரி கணக்கெடுப்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வாய்ப்பை நாம் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

`நாடார்' இனத்தின் உண்மையான நிலையை நிலை நிறுத்தவும், அரசு உரிமைகளை பெற்றிடவும், அங்கீகாரம் பெற்றிடவும், சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக நடைபெறும் சாதி வாரி கணக்கெடுப்பில் உட்பிரிவுகளை மறந்து நாம் அனைவரும் "நாடார்'' என்று பதிய வேண்டும்.

நாடார் இன உட்பிரிவுகளான சாணார், கிராமணியர், சத்திரியர், மூப்பர், முக்கந்தர், நட்டாத்தி, கொடிக்காலர், கருக்குப்பட்டையர், சேர்வை போன்று இன்னும் சில உட்பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

ஆனால் நாம் அனைவரும் கண்டிப்பாக `நாடார்' என்றே பதிய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் தான் நமது பலத்தை அரசுக்கு தெரியப்படுத்த முடியும். அரசு துறைகளில் நமக்கு உள்ள உரிமைகளை பெறவும், ஆட்சியில் நமது சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் பெறவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், சாதிவாரி கணக்கெடுப்பில் நாம் அனைவரும் தாமாகவே முன்வந்து `நாடார்` என்றே பதிவு செய்து ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் நமது சமுதாயத்தவர்கள் அனைவரும் உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பில் `நாடார்' என்று பதிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி ``நாடார்`` என்று பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அருந்ததியர்

அருந்ததியர் நல சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருந்ததியர்கள் அனைவரும் நம்மில் பல பிரிவுகள் இருந்தாலும் இந்த கணக்கெடுப்பில் அருந்ததியர் என ஒரே இனமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பழங்குடியினர்

பழங்குடி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குறிஞ்சி கேசவபாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், பழங்குடியின மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடோடிகளாக 36 வகை பட்டியல் பழங்குடியினரும், 6 வகை பட்டியலில்லா பழங்குடியினரும் உள்ளனர். பழங்குடியினர் அனைவரும் அவரவர் உட்பிரிவுகளை சொல்லி பதிவு செய்ய வேண்டும். பழங்குடியினரை ஒரே சாதியினராக கருதும் வகையில் குறவன் என சொல்லி பதிவு செய்து தொண்மை பழங்குடியினர் என கூறவேண்டும் என்று கூறியுள்ளார்.

வன்னிய குலம் சத்திரியா

வன்னியர் குல சத்திரியா கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியகுல சத்திரியா சமூகத்தினர் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். இவை பல சமூகத்தினருக்கு சாதி பெயராகவே உள்ளது. இதை கண்துடைப்பு வேலையாக செய்யக்கூடாது. உடனடியாக சாதி மற்றும் மதத்தலைவர்களை அழைத்து பல்வேறு கட்டங்களாக அனைத்து சாதி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உரிய முறையில் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேவரினம்

அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பில் உட்பிரிவுகளை தவிர்த்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள தேவரினம் என்கிற அரசாணையினை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவரினம் என்று குறிப்பிட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வேறுபாடின்றி ஒருங்கிணைந்த தேவரினத்தை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேவேந்திர குலம்

மள்ளர் நாடு சமூக நல நிறுவன தலைவர் சுப. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தேவேந்திரர்கள் தங்களின் உட்பிரிவுகளான காலாடி, குடும்பன், மூப்பன், பண்ணாடி, வாய்காரர், கடையர், வாதியார் என்பதற்கு பதிலாக ஒரே இனமாக தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவேந்திர குலத்தான் என அதிகாரிகள் பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், எனவே தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டுமே தவிர ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் எஸ்.சி. என பதிவு செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in