Thursday, February 9, 2012

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பொறியியல் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் நியமனம்!

அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில், புதியவர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 


தமிழகத்தில் 36 அரசு பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 

பொதுவாக, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கும்போது, முதுநிலை பட்டம் அல்லது ஆய்வுப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அவற்றுடன் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 

ஆனால், பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக சேர்வதற்கு, இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பில் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலே போதும். முன் அனுபவம் பெற்றிருந்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். 

இந்த அடிப்படையில்தான் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்புகளை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in