Sunday, November 20, 2011

இந்த ஆண்டிற்குள் 55,000 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி. வி. சண்முகம்

 தமிழகத்தில் இந்த ஆண்டிற்குள் அரசு பள்ளிகளில் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவிருக்கிறார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என மொத்தம் 14,377 பேர் நியமிக்கப்படுவார்கள். பகுதி நேர ஆசிரியர்களாக 16,000 பேர் நியமிக்கப்படுவார்கள். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்குள் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.



அதன்படி ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 15525 பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 3187 பேர், பகுதி நேர ஆசிரியர்கள் 16549 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இது தவிர தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் பணியிடங்களில் 3565 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் 5000 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய இடை நிலை கல்வி திட்டத்தின் கீழ் 544 ஆய்வக உதவியாளர்கள் 344 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நடுநிலைப்பள்ளிகளில் 831 தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in