மத்திய அரசின் பணி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு தேர்வுகளை நடத்தி காலிப் பணி இடங்களை நிரப்பி வருகிறது. எஸ்.எஸ்.சி., தற்போது ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (சி.எஸ்.எல்.ஓ.,) பதவிக்கான எழுத்துத் தேர்வை அறிவித்துள்ளது.
தேவைகள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு நிகரான படிப்பில் ஆங்கிலம் அல்லது இந்தியை ஒரு பாடமாகவோ, அல்லது இதே அளவிலான படிப்பை இந்தி அல்லது ஆங்கில மொழி வாயிலாகவோ, அல்லது இதே அளவிலான படிப்பில் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு விருப்பப் பாடமாகவோ படித்திருக்க வேண்டும்.
இதனுடன் இந்தியிலிருந்து ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழி மாற்றம் செய்யும் சான்றிதழ் படிப்பு, மற்றும் இந்த துறையில் இரண்டு வருட பணி அனுபவம் தேவைப்படும். எழுத்துத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னையில் எதிர்கொண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.