ஆரம்ப பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் தீபக் மிஸ்ரா தற்காலிக ஆசிரியர்களின் நிய
மனம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்வி உரிமைச்சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகும் இந்த நடைமுறை இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறினர். மேலும் பிரபலமான ஒரு நடைமுறை நாட்டின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்க அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
ஆசியர்களுக்கான கல்வி தகுதி குறித்து தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். கல்வி உதவியாளர்கள் நியமனம் குறித்த வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், கல்வி உதவியாளர்கள் கல்விக்கு எதிரானவர்கள் என்றும் கண்டித்தனர். கல்வி உரிமைச்சட்டம் அமலில் இருக்கும் போது தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எப்படி சாத்தியமாகும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
further details : watch puthiyathalaimurai Tv Channel

No comments:
Post a Comment