Friday, September 2, 2011

வி.ஏ.ஓ.பணியிடங்களை நிரப்ப தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் காலியாக உள்ள 1,576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.பழனிமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், கடந்தாண்டு ஜூலை மாதம் 1,576 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் வெளியிட்டது.

இதற்கு கடந்த பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 1,077 பின்னடைவு காலியிடங்களுக்கான முடிவுகளை வெளியிடவில்லை. இந்நிலையில், நீதிமன்றத்தை திசை திருப்பி, 1,077 காலியிடங்களுக்கான முடிவுகளை வெளியிட தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு முன்பு, பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி.நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனவே, 1,576 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி-க்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கியோர் அடங்கி்ய முதல் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in