Thursday, May 30, 2013

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: கலக்கிய மாணவிகள்... 498 மதிப்பெண்களுடன் 9 மாணவிகள் முதலிடம்!

தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். இணைய தளங்கள்... தேர்வு முடிவுகளை 

கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.

Wednesday, May 29, 2013

விரைவில் சைபர் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அமைச்சர் தகவல்


இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையிலான இண்டர்நெட் பாதுகாப்புப் படைப் பிரிவு விரைவில் உருவாக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.
கேரள மாநிலம் கன்னூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஏற்கெனவே இருக்கும் சைபர் பாதுகாப்பு பிரிவைவிட மேம்பட்ட வகையில் புதிய படைப்பிரிவு இருக்கும் என்று கூறினார்.
இந்தியாவின் தொலைத் தொடர்பு வலையமைப்புகளை சிதைப்பதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகக் தகவல்களை வந்திருப்பதால், இந்த நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.

Tuesday, May 28, 2013

GROUP-I பொது அறிவு - புயலுக்கு பெயர் வைத்தல்


புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?


தமிழகத்தையும் புதுவையையும் உலுக்கி எடுத்தது, ‘தானே’. இப்போது, ‘தானே’ போலவே சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜல்’, ‘லைலா’ போன்ற பெயர்களும் ஊடகங்களில் அடிபட்டன. புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?


பிரத்யேகமான பெயர் இருந்தால்தான் எந்த விஷயத்தையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். புயல் குறித்த எச்சரிக்கைக்கும் அதன் பின் விளைவுகளை தெரிவிக்கவும் ஊடகங்களுக்கு இந்தப் பெயர் பெரிய அளவில் உதவியாக உள்ளது.


ஆரம்பத்தில் தன்னிச்சையாகவும் பின்பு பெண்களின் பெயரிலும் புயல்கள் குறிப்பிடப்பட்டன. அதன்பின் சர்வதேச அளவில் செயல்படும் வானிலை ஆய்வு மையம் பல நாடுகளும் சிபாரிசு செய்த பெயர்களை முறைப்படுத்தி, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப புயலுக்கு பெயர் வைக்கப்பட்டது.

காந்தப்புயல் - சில தகவல்கள் TNPSC MATERIALS FOR SCIENCE AND TECHNOLOGY

சூரியனின் மேற்பரப்பில் தோன்றியுள்ள காந்தப்புயல் பூமியை இன்று மூன்று விதமாக வெவ்வேறு தருணங்களில் தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   சூரியனின் மேற்பரப்பில் இருந்து லட்சக்கணக்கான மின்அழுத்தம் கொண்ட கதிர் வீச்சுகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
பல்வேறு வேதியியல் மாற்றங்களால் கதிர்வீச்சுகள் பெருமளவில் கொந்தளித்து அலைகளாக வீசும். இந்த நிகழ்ச்சி சூரியப்புயல் அல்லது சூரிய கதிர்வலைகள் எனப்படுகிறது.
விஞ்ஞானிகள் சிலர் இதை காந்தப்புயல் என்றும் கூறுகின்றனர். சூரியனில் உருவாகும் காந்தப்புயல், அங்கிருந்து கிளம்பி பல்வேறு கோள்களையும் சென்றடையும். அப்போது அந்த கோள்களில் சில பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் நிகழும்.  
கடந்த சில ஆண்டுகளாக சூரியனின் மேற்புறம் அமைதியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் திடீர் வேதியியல் மாற்றங்கள் காரணமாக கடந்த 22-ந்தேதி சூரியனின் மேற்புறத்தில் அதிர்வலைகள் தோன்றின. அங்கிருந்து புறப்பட்ட சூரிய கதிர்வலைகள் ஒரு மணி நேரத்தில் பூமியை தாக்கியது.
தற்போது அதைவிட சக்தி வாய்ந்த காந்தப்புயல் (சூரிய கதிர்வலை) உருவாகியுள்ளது.   கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த காந்தப்புயல் இதுவாகும். இந்தப்புயல் இன்று பூமியை கடுமையாக தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, May 27, 2013

TNPL Recruitment of DGM and AGM 2013 May Updates


Tamilnadu Newsprints and Papers Ltd, Chennai
Tamilnadu Newsprints and Papers Ltd, Chennai
Advt No.DIPR/573/Display/2013 

Advt date 22.05.2013

Last date 06.06.2013

Posts : 

  • Deputy General Manager (Plantation) - 1 BC - IDA 44000 - 1st class full time BE/BTech/BSc Agriculture / Forestry / Horticulture or MSc Botany - Exp 24 yrs - Post at Karur

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in