தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் நடப்பாண்டில் 2.84% ஆக இருக்கும் என்றும் அடுத்த அடுத்த ஆண்டுகளில் இது 2.78% ஆகவும், 2.71% ஆகவும் குறையும் என்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம் , 2013-2014 ஆம் ஆண்டிற்கான வருவாய் கணக்கு செலவுகள் ரூ.1,17,915.81 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடு 2012-2013 ஐக் காட்டிலும் 15 சதவீதம் கூடுதலாகும். அதிக அளவிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியது, நடைமுறையிலுள்ள திட்டங்களுக்கான உதவித் தொகைகளை உயர்த்தியது மற்றும், காலிப் பணியிடங்களைத் திட்டமிட்டு நிரப்பியது போன்றவையே இந்த உயர்வுக்குக் காரணம்.
சம்பளத்துக்கான ஒதுக்கீடு ரூ.34,569.28 கோடி
2013-2014 ல் சம்பளம் குறித்த ஒதுக்கீடு ரூ.34,569.28 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்திற்கான ஒதுக்கீடு ரூ.15,117.82 கோடியாகும். இவ்வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவுகள் மொத்த வருவாய் செலவுகளில் 42 சதவீதமாகும். ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி நிலுவைத் தொகை முழுவதுமாக வழங்கப்பட்டிருப்பினும், காலமுறை அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் ஏற்படும் கூடுதல் செலவு ஆகியவை மேற்கூறிய செலவினம் அதிகரிக்கக் காரணங்களாகும்.
மானியம், உதவித் தொகைகள் ரூ45,176 கோடி